IND vs SL : முதல் டி20 நடைபெறும் வான்கடே மைதானம் எப்படி? வரலாற்று புள்ளி விவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

Wankhede Stadium
Advertisement

இந்திய கிரிக்கெட் அணி 2023 புத்தாண்டில் முதலாவதாக சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அதில் முதலாவதாக நடைபெறும் டி20 தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் அணி விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் சீனியர்களால் ஏமாற்றத்தை சந்தித்ததால் 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக புதிய அணியை உருவாக்கும் வேலையை தொடங்கியுள்ள இந்திய அணி நிர்வாகம் சமீபத்திய நியூஸிலாந்து சுற்றுப்பயணம் போலவே இத்தொடரிலும் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க உள்ளது.

INDvsSL

எனவே எப்போதுமே சொந்த மண்ணில் வலுவான அணியாக இந்தியா திகழும் கடைசியாக நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் ஹர்திக் பாண்டியா தலைமையில் 1 – 0 (3) என்ற கணக்கில் தோற்கடித்து கோப்பையை வென்ற புத்துணர்ச்சியுடன் இத்தொடரிலும் விளையாடி வெற்றிக்கு போராடவுள்ளது. அதற்கேற்றார் போல் என்ன தான் முதன்மை வீரர்கள் இல்லை என்றாலும் சூரியகுமார், பாண்டியா, இஷான் கிசான் என இலங்கையை சமாளித்து வெற்றி பெறும் அளவுக்கு தற்சமயத்தில் நல்ல பார்மில் உள்ள வீரர்கள் இந்திய அணியில் நிறைந்துள்ளார்கள். மறுபுறம் சமீப காலங்களில் இலங்கை தடுமாறினாலும் சமீபத்தில் நடைபெற்ற 2022 எல்பிஎல் டி20 தொடரில் அசத்தலாக செயல்பட்டு நல்ல பார்மில் இருக்கும் வீரர்களை அந்நாட்டு வாரியம் இத்தொடருக்கு தேர்வு செய்துள்ளது.

- Advertisement -

வான்கடே மைதானம்:
எனவே வலுவான இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிக்க இலங்கையும் போராடும் இத்தொடரின் முதல் போட்டி ஜனவரி 3ஆம் தேதியன்று மும்பையில் இருக்கும் புகழ்பெற்ற வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. முன்னதாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் வரலாற்றில் 26 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 17 போட்டிகளில் வென்று இந்தியா வலுவான அணியாக உள்ள நிலையில் இலங்கை 8 போட்டிகளில் வென்றது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

wankhede

1. குறிப்பாக இத்தொடர் நடைபெறும் இந்திய மண்ணில் இவ்விரு அணிகளும் மோதிய 15 போட்டிகளில் இந்தியா 11 வெற்றிகளையும் இலங்கை 3 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளது. அதிலும் குறிப்பாக இப்போட்டி நடைபெறும் வான்கடே மைதானத்தில் 2017இல் மோதிய போது இலங்கையை இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

- Advertisement -

2. கடந்த 1975 முதல் சர்வதேச போட்டிகளை நடத்தி வரும் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற மைதானங்களில் ஒன்றாக திகழும் வான்கடே மைதானத்தில் வரலாற்றில் நடைபெற்ற 7 டி20 போட்டிகளில் 4இல் விளையாடியுள்ள இந்தியா 2 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் சந்தித்துள்ளது.

Virat Kohli 122

3. இந்த மைதானத்தில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (197) மற்றும் அரை சதங்கள் (2) பேட்ஸ்மேனாக இந்தியாவின் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். மேலும் அதிக விக்கெட்டுகளை (3) எடுத்த இந்திய வீரராக யுவராஜ் சிங் உள்ளார்.

- Advertisement -

4. இந்த மைதானத்தில் டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்துள்ள அணி : இந்தியா 240/3, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, 2019

பிட்ச் ரிப்போர்ட்:
சுமார் 3 வருடங்கள் கழித்து முதல் முறையாக சர்வதேச டி20 போட்டியை நடத்தும் வான்கடே மைதானம் எப்போதுமே பேட்டிங்க்கு சாதகமானது என்பதை அனைவரும் அறிவோம். குறிப்பாக இங்குள்ள பிட்ச்சில் பயன்படுத்தப்படும் செம்மண் நல்ல பவுன்ஸ் எழுவதற்கு உதவக் கூடியது. மேலும் இம்மைதானத்தின் பவுண்டரிகள் சிறியதாக இருக்கும் என்பதால் வேகம், பவுன்ஸ் ஆகியவற்றை பயன்படுத்தி நிலைத்து நின்று விளையாடினால் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக பெரிய ரன்களை குவிக்க முடியும்.

- Advertisement -

அதனாலேயே வரலாற்றில் இங்கு நடைபெற்ற சர்வதேச டி20 போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 194 ரன்களாக இருக்கிறது. அதே சமயம் ஆரம்பகட்ட ஓவர்களில் புதிய பந்தில் ஸ்விங் செய்யக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்களும் மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களும் அச்சுறுத்தலை கொடுப்பார்கள். மேலும் வரலாற்றில் இங்கு நடைபெற்ற 7 போட்டிகளில் 5 முறை சேசிங் செய்த அணிகள் வென்றுள்ளன. அத்துடன் இப்போட்டி இரவு நேரத்தில் நடைபெறுவதுடன் இந்தியாவில் பனி காலமாகவும் இருப்பதால் நிச்சயம் பணியின் தாக்கம் ஏற்படலாம். அதனால் டாஸ் வெல்லும் முதலில் பந்து வீசுவது வெற்றிக்கு வித்திடலாம்.

இதையும் படிங்கஇதை தானே விராட் கோலியும் சொன்னாரு, யோ-யோ டெஸ்டால் ரோஹித் சர்மாவை கலாய்க்கும் ரசிகர்கள் – காரணம் இதோ

வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நாளன்று மும்பை நகரில் மழைக்கான வாய்ப்பு எதுவுமில்லாமல் தெளிவான வானிலை நிலவும் என்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் இரவு நேரத்தில் நல்ல குளிர்ச்சியான வானிலை நிலவக்கூடும்.

Advertisement