இதை தானே விராட் கோலியும் சொன்னாரு, யோ-யோ டெஸ்டால் ரோஹித் சர்மாவை கலாய்க்கும் ரசிகர்கள் – காரணம் இதோ

Rohit-and-Kohli
Advertisement

2023 புதிய வருடத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை ஆகிய அடுத்தடுத்த பெரிய சவால்களில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்வதற்கு இந்திய கிரிக்கெட் அணி போராடவுள்ளது. குறிப்பாக கடந்த வருடம் ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் சந்தித்த தோல்வியால் விமர்சனங்களை சந்தித்துள்ள இந்திய அணி கடந்த 2013க்குப்பின் ஒரு ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் திண்டாடி வருகிறது. முன்னதாக இந்தியாவின் சமீப கால தோல்விகளுக்கு அதில் விளையாடும் முக்கிய வீரர்களின் சுமாரான பிட்னெஸ் மறைமுகமான முதன்மை காரணமாக அமைந்து வருகிறது.

yo yo

எடுத்துக்காட்டாக கடந்த வருடம் ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹர் ஆகிய 3 முக்கிய வீரர்கள் டி20 உலக கோப்பைக்கு முன்பாக கடைசி நேரத்தில் காயமடைந்து வெளியேறியது வெற்றியில் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இத்தனைக்கும் தீபக் சஹர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஏற்கனவே அதற்கு சில மாதங்கள் முன்பாக காயமடைந்து பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று முழுமையாக குணமடைந்து மீண்டும் திரும்பினார்கள். ஆனால் அதன் பின் முழுமையாக 10 போட்டிகளில் கூட விளையாடாமல் மீண்டும் காயத்தை சந்தித்து அவர்கள் வெளியேறினார்கள்.

- Advertisement -

கலாய்க்கும் ரசிகர்கள்:
இதனால் தேசிய கிரிக்கெட் அகாடமியில் என்ன நடக்கிறது? அங்கே முழுமையாக குணமடையாமலேயே குணமடைந்ததாக சான்றிதழ் வாங்கிக் கொண்டு வீரர்கள் வருகிறார்களா? என்று குழப்பமும் கேள்வியும் சமீப காலங்களில் ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக அடுத்து வரும் தொடர்களில் இந்தியாவுக்காக தேர்ந்தெடுக்கப்பட உள்ள வீரர்கள் முதலில் யோ-யோ டெஸ்டில் தேர்வாகியிருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை பிசிசிஐ மீண்டும் கொண்டு வந்துள்ளது.

 

- Advertisement -

இதனால் பேட்ஸ்மேன், பவுலர், ஆல்-ரவுண்டர் என்பதை தாண்டி கேப்டன் முதல் 11வது வீரர் வரை அனைவரும் யோ-யோ டெஸ்ட் அதாவது முழு உடல் தகுதி தேர்வில் தேர்வானால் மட்டுமே இந்தியாவுக்கு விளையாட முடியும் என்ற நிலைமை கொண்டு வரப்பட்டுள்ளது. அதை அறியும் ரசிகர்கள் கேப்டன் ரோகித் சர்மாவை சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகிறார்கள். ஏனெனில் விராட் கோலி – ரவி சாஸ்திரி ஆகியோர் கேப்டன் மற்றும் பயிற்சியாளராக தலைமையில் இருந்த போது மிகவும் கண்டிப்புடன் கடை பிடிக்கப்பட்டு வந்த யோ-யோ டெஸ்ட்டை ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்றதும் மூட்டை கட்டினார்.

மேலும் உடல் தகுதியை விட திறமை தான் வெற்றிக்கு உதவும் என்று பேட்டி கொடுத்த அவர் இதர வீரர்களுக்கு உதாரணமாக அல்லாமல் சுமாரான உடல் தகுதியை இப்போதும் கொண்டுள்ளார். அதனாலயே கேப்டனாக பொறுப்பேற்றதுமே 2022 ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்கா மண்ணில் நடந்த முதல் ஒருநாள் தொடரில் காயத்தால் வெளியேறிய அவருக்கு பதில் ராகுல் கேப்டனாக செயல்படும் நிலை ஏற்பட்டது.

- Advertisement -

அத்துடன் 2022 ஐபிஎல் தொடரிலும் வரலாற்றில் முதல் முறையாக அரை சதம் அடிக்காமல் திண்டாடிய அவர் பெரும்பாலும் பணிச்சுமை மற்றும் காயம் என்ற பெயரில் ஓய்வெடுத்ததால் 2022இல் வரலாற்றிலேயே முதல் முறையாக 7 வெவ்வேறு வீரர்களை கேப்டனாக பயன்படுத்த வேண்டிய அவலம் இந்தியாவிற்கு ஏற்பட்டது. மேலும் சமீப காலங்களில் அவர் களத்தில் வேகமாக ஓடுவதையும் சுறுசுறுப்பாக செயல்படுவதையும் பார்க்க முடியவில்லை.

இதையும் படிங்க2023 உலக கோப்பைக்கு பிசிசிஐ தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ள உத்தேச 20 இந்திய வீரர்களின் பட்டியல்

அவரை பார்த்து பெரும்பாலான இதர வீரர்களும் இப்போதெல்லாம் உடல் தகுதியே ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. எனவே தற்போது யோ யோ டெஸ்ட் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளதால் உடல் எடையை குறைத்து பிட்டாக இருந்தால் மட்டுமே இந்தியாவுக்கு தேர்வாக முடியும் என்ற நிலைமை வந்துள்ளது. அதனால் ரோகித் சர்மா வலுவாக சிக்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் கலாய்க்கும் ரசிகர்கள் அவர் யோயோ டெஸ்ட் எடுக்கும் தருணத்தை மட்டும் நேரடி ஒளிபரப்பு செய்யுமாறும் அதை நாங்கள் பார்க்க ஆவலுடன் இருப்பதாகவும் கலகலப்புடன் தெரிவிக்கிறார்கள்.

Advertisement