இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடின்றது. 2026 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் நோக்கத்தில் நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அடுத்தப் போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தென்னாப்பிரிக்கா பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்தது.
இருப்பினும் 3வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதை அடுத்து 4வது போட்டியில் வென்று 3 – 1* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்ல இந்தியா தயாராகியுள்ளது. அதற்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய தென்னாப்பிரிக்கா தயாராகியுள்ளது.
லக்னோ வாஜ்பாய் மைதானம்:
அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 4வது போட்டி டிசம்பர் 17ஆம் தேதி லக்னோவில் இருக்கும் பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7:00 மணிக்கு நடைபெறுகிறது. 2017இல் தோற்றுவிக்கப்பட்ட இம்மைதானம் 50000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை நடைபெற்ற 6 சர்வதேச டி20 போட்டிகளில் 3இல் விளையாடியுள்ள இந்தியா 3 வெற்றிகளைப் பெற்றுள்ளது. இம்முறை இந்தியா முதல் முறையாக தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
வெதர் ரிப்போர்ட்:
லக்னோ நகரில் போட்டி நாளன்று மழை பெய்வதற்கான வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது. இரவு நேரங்களில் சராசரியாக வெப்பம் 17 – 13 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.
பிட்ச் ரிப்போர்ட்:
லக்னோ மைதானத்தின் பிட்ச் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சாதகமாக இருந்து வருகிறது. அதே சமயம் நேரம் செல்ல செல்ல பிட்ச் ஸ்லோவாகி பின்னர்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு உதவக்கூடும். புதிய பந்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தை ஸ்விங் செய்து சவாலைக் கொடுப்பார்கள். எனவே பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிப்பதற்கு சூழ்நிலையை படித்து விளையாடுவது அவசியமாகும்.
இதையும் படிங்க: இந்திய டி20 அணியிலிருந்து வெளியேறிய அக்சர் பட்டேல்.. மாற்றுவீரர் அறிவிப்பு – விவரம் இதோ
வரலாற்றில் இங்கு நடைபெற்ற 6 சர்வதேச டி20 போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 160. அதில் 5 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும் 1 முறை சேசிங் செய்த அணியும் வென்றுள்ளது. அதே சமயம் இங்கு நடந்த 24 ஐபில் போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 175. அதில் 10 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும் 14 முறை சேசிங் செய்த அணிகளும் வென்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் பனியின் தாக்கத்தை கருத்தில் முதலில் பந்து வீசி எதிரணியை கட்டுப்படுத்துவது வெற்றிக்கு வித்திடலாம்.



