தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் களமிறங்க போகும் உத்தேச 11 பேர் இந்திய அணி இதோ

Indian Team
Advertisement

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூன் 9-ஆம் தேதியன்று துவங்குகிறது. இந்த தொடருக்கு கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகிய மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு கேஎல் ராகுல் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் கடைசி நேரத்தில் வலை பயிற்சியின்போது கேஎல் ராகுல் காயமடைந்ததால் அவருக்கு பதில் ரிஷப் பண்ட் கேப்டனாகவும், ஐபிஎல் 2022 கோப்பையை வென்று காட்டிய ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக செயல்படுவார்கள் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

Ind vs SA Temba Bavuma Pant

இதையடுத்து இவ்விரு அணிகள் மோதும் முதல் போட்டி ஜூன் 9-ஆம் தேதி இரவு 7 மணிக்கு தலைநகர் டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானத்தில் துவங்குகிறது. இப்போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையில் தினேஷ் கார்த்திக், ஷ்ரேயஸ் ஐயர், புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல் என அனுபவமும் இளமையும் அதிரடியும் கலந்த இந்திய அணியை தெம்பா பவுமா தலைமையில் இதே ஐபிஎல் தொடரில் மிரட்டிய டேவிட் மில்லர், குயின்டன் டி காக், காகிசோ ரபாடா போன்ற தரமான நட்சத்திரங்கள் நிறைந்த தென்னாபிரிக்கா எதிர் கொள்கிறது.

- Advertisement -

எனவே ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெறுவதற்கு இரு அணி வீரர்களும் கடுமையாக போராடுவார்கள் என்பதால் இப்போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்ய இந்த தொடர் ஒரு முக்கிய பாலமாக அமைய உள்ளது. அப்படிப்பட்ட நிலையில் இப்போட்டியில் களமிறங்கப் போகும் 11 பேர் உத்தேச இந்திய அணியைப் பற்றி பார்ப்போம்.

ruturaj

ஓப்பனிங்:
ருதுராஜ் கைக்வாட்: தொடக்க வீரர் மற்றும் கேப்டனாக களமிறங்க இருந்த கேஎல் ராகுல் காயம் அடைந்ததாலும் ரோகித் சர்மா ஷிகர் தவான் போன்ற சீனியர்கள் இல்லாததாலும் அவருக்கு பதில் ருதுராஜ் கைக்வாட் களமிறங்க 90% வாய்ப்புள்ளது. ஏனெனில் கடந்த வருடம் 635 ரன்களைக் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்ற இவர் இம்முறை சென்னைக்காக 300+ ரன்களுக்கும் மேல் விளாசினார்.

- Advertisement -

இஷான் கிசான்: கடந்த ஐபிஎல் தொடரில் மிரட்டலாக பேட்டிங் செய்து இந்தியாவிற்காக விளையாடும் வாய்ப்பை பெற்ற இவர் இந்த வருடம் 15.25 கோடி என்ற பெரிய தொகைக்கு சுமாராகவே பேட்டிங் செய்தார். இருப்பினும் முடிந்த அளவுக்கு 14 போட்டிகளில் 418 ரன்களை 120.11 என்ற சுமாரான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்தார். வேறு ஓபனிங் பேட்ஸ்மேன் இல்லாத காரணத்தால் ருதுராஜ் உடன் இவர் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.

Shreyas

மிடில் ஆர்டர்:
ஷ்ரேயஸ் ஐயர்: 3-வது இடத்தில் சூர்யகுமார் யாதவ், விராட் கோலி போன்றவர்கள் இல்லாத காரணத்தால் சமீபத்திய ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் கேப்டனாக 14 போட்டிகளில் 401 ரன்களை எடுத்து முடிந்த அளவுக்கு சிறப்பாக பேட்டிங் செய்த இவர் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

ரிஷப் பண்ட்: 4-வது இடத்தில் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக களமிறங்கினால் பேட்டிங் வரிசை சிறப்பாக அமைந்து வெற்றிக்கு உதவும்.

dinesh

தினேஷ் கார்த்திக்: இந்த ஐபிஎல் தொடரில் பெரும்பாலான போட்டிகளில் கடைசி நேரத்தில் களமிறங்கி சொல்லி அடித்து 3 வருடங்களுக்கு பின் வாய்ப்பை பெற்றுள்ள இவர் 5-வது இடத்தில் பினிஷெராக அசத்துவார் என்று நம்பலாம்.

- Advertisement -

ஆல் ரவுண்டர்கள்:
ஹர்டிக் பாண்டியா: இந்தியாவுக்காக பெரும்பாலும் மிடில் ஆர்டரில் விளையாடிய இவர் இந்த ஐபிஎல் தொடரில் 3, 4 ஆகிய இடங்களில் விளையாடி மிரட்டலாக பேட்டிங் செய்தார். இருப்பினும் தற்போது டாப் ஆர்டரில் முக்கிய பேட்ஸ்மென்கள் இல்லாததால் அந்தப் பொறுப்பை மிடில் ஆர்டரில் ஏற்கவேண்டிய இவர் ஆல்-ரவுண்டராக 6-வது இடத்தில் களமிறங்கி பினிஷராக அசத்தலாம்.

Pandya-2

அக்சர் படேல்: சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டரான இவர் குல்தீப் யாதவ் காயத்தால் விலகியதாலும் கணிசமாக பேட்டிங் செய்வதாலும் 7-வது இடத்தில் சரியாக பொருந்துவார்.

பவுலர்கள்:
முதல் வேகப்பந்து வீச்சாளராக அனுபவம் வாய்ந்த துல்லியத்துக்கு பெயர்போன புவனேஸ்வர் குமாருடன் பெங்களூரு அணிக்காக துல்லியமாக பந்து வீசிய ஹர்ஷல் படேல் இந்த போட்டியில் கண்டிப்பாக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேப்போல் 2-வது சுழற்பந்து வீச்சாளராக இந்த ஐபிஎல் தொடரில் ஊதா கோப்பையை வென்ற சஹால் உறுதியாக விளையாட உள்ளார். 3-வது வேகப்பந்து வீச்சாளராக ஐபிஎல் தொடரில் மிரட்டிய உம்ரான் மாலிக் அல்லது அர்ஷிதீப் சிங் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் அறிமுகமாக களமிறங்க வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : கே.எல் ராகுலின் காயத்தால் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு அடித்த ஜாக்பாட் – விவரம் இதோ

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் டி20 போட்டியில் களமிறங்கும் 11 பேர் உத்தேச இந்திய அணி இதோ:
ருதுராஜ் கைக்வாட், இஷான் கிசான், ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட் (கேப்டன்/கீப்பர்), தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டியா, அக்சர் படேல், புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், யுஸ்வேந்திர சஹால், உம்ரான் மாலிக்/அர்ஷிதீப் சிங்

Advertisement