IND vs RSA : 2 ஆவது போட்டி நடைபெறும் கட்டாக் மைதானத்தில் மழைக்கு வாய்ப்பு. ஆனா – வெளியான ரிப்போர்ட்

Cuttack
- Advertisement -

தெம்பா பவுமா .தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ரிஷப் பண்ட் தலைமையிலான இளம் இந்திய அணி இந்த தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. மறுபுறம் அனுபவம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா அணி பல ஸ்டார் வீரர்களை அணியில் வைத்துள்ளதால் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

INDvsRSA

குறிப்பாக டெல்லி மைதானத்தில் ஜூன் 9-ஆம் தேதி நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 211 ரன்கள் குவித்தும் அதனை எளிதாக சேசிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி இன்று ஒடிசா மாநிலம் கட்டாக் மைதானத்தில் நடைபெற உள்ளது.

- Advertisement -

முதலாவது போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்க்கும் வகையில் இந்திய அணி இந்த போட்டியில் பதிலடி கொடுக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதே வேளையில் இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரில் 2 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற தென் ஆப்பிரிக்கா அணியும் ஆர்வம் காட்டும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தில் உள்ளது.

rain

இதனிடையே இன்று கட்டாக்கில் மழை பெய்யாது என உறுதியாக கூற முடியாது என்று அம்மாநில வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இன்று வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்பதால் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் ஆனாலும் போட்டியை பாதிக்கும் அளவிற்கு கன மழை பெய்யாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து கிரிக்கெட் நிர்வாகம் சார்பில் வெளியான அறிக்கையில் : இன்று மாலை மழை பெய்தாலும் அந்த நிலைமையை எதிர் கொண்டு உடனடியாக மைதானத்தில் இருந்து நீரை வெளியேற்ற தங்களிடம் போதுமான வசதி இருப்பதாகவும், மழை பெய்தாலும் அந்த நிலையை சமாளிக்க கூடிய அளவிற்கு தங்களிடம் யுத்திகள் இருப்பதாகவும் ஒடிசா கிரிக்கெட் சங்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : IND vs RSA : இன்றைய 2 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

மேலும் மழை பெய்தாலும் விரைவில் போட்டியை தொடங்கி மிகச் சிறப்பாக நடத்த அனைத்து ஆயத்த ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெறும் இந்த கிரிக்கெட் போட்டியை காண அம்மாநில ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement