இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. 2026 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் நோக்கத்தில் நடைபெறும் அத்தொடரில் 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. 4வது போட்டி மூடுபனியால் கைவிடப்பட்ட நிலையில் 5வது போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் தயாராகியுள்ளன.
குறிப்பாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்து விட்ட தென்னாப்பிரிக்கா கடைசிப் போட்டியில் வென்று 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்யத் தயாராகியுள்ளது. அதற்கு பதிலடி கொடுத்து என்ற 3 – 1 கணக்கில் தொடரை வெல்ல இந்திய அணியும் தயாராக இருக்கிறது. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கடைசிப் போட்டி டிசம்பர் 19ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது.
அஹமதாபாத் மைதானம்:
1982இல் தோற்றுவிக்கப்பட்டு மொட்டேரா என்றழைக்கப்பட்டு வந்த இம்மைதானம் தற்போது 132000 ரசிகர்கள் அமரும் அவ்வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதனால் உலகிலேயே மிகப்பெரிய மைதானம் என்ற பெருமையைப் பெற்றுள்ள அஹமதாபாத்தில் இதுவரை 7 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்று உள்ளது. அதில் 5 வெற்றிகள், 2 தோல்விகளை சந்தித்துள்ள இந்தியா தற்போது முதல் முறையாக தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
வெதர் ரிப்போர்ட்:
அகமதாபாத்தில் இன்று மழை பெய்வதற்கான வாய்ப்பில்லை என்று இந்திய மாநில மையம் தெரிவிக்கிறது. இரவு நேரத்தில் 18 – 21 செல்சியஸ் வெப்பம் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காற்றின் தரம் நடுநிலையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவு நேரத்தில் பனிப்பொழிவு இருக்கும் என்று உறுதியாக நம்பலாம். இருப்பினும் லக்னோ போல் இப்போட்டி ரத்து செய்யப்படும் அளவுக்கு பனி இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிட்ச் ரிப்போர்ட்:
அஹமதாபாத் மைதானத்தின் பிட்ச் வேகம், பவுன்ஸ் ஆகியவற்றை கொண்டிருப்பதால் பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன்கள் குவிப்பதற்கு உதவும். எனவே பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்க அதிக நேரத்தை செலவிட வேண்டும். அதே போல வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய பந்தில் நன்றாக வீசும் போது தாக்கத்தை ஏற்படுத்தி விக்கெட்டுகளை எடுப்பார்கள். மிடில் ஓவர்களில் வழக்கம் போல ஸ்பின்னர்கள் சவால் கொடுப்பார்கள்.
இதையும் படிங்க: சாம்பியன் பட்டத்தை வென்ற கையோடு இந்திய அணித்தேர்வு குறித்து வருத்தம் தெரிவித்த – இஷான் கிஷன்
அந்த வகையில் பிட்ச் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்குமே சாதகமாக இருக்கும். வரலாற்றில் இங்கு நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 183. இங்கு முதலில் பேட்டிங் செய்த அணிகள் 4 முறையும் சேசிங் செய்த அணிகள் 3 முறையும் வென்றுள்ளன. இருப்பினும் இம்முறை பனியின் தாக்கத்தை கருத்தில் கொண்டு டாஸ் வெல்லும் கேப்டன் சேசிங் செய்வதை தேர்ந்தெடுப்பது வெற்றிக்கு வித்திடலாம்.



