- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியா – தெ.ஆ 2வது டி20 நடைபெறும் முல்லான்பூர் மைதானம் எப்படி? பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

இந்திய அணி தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சந்தித்த தோல்விக்கு ஒருநாள் தொடரை வென்று பதிலடி கொடுத்தது. அடுத்ததாக அவ்விரு அணிகள் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றன. 2026 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் நோக்கத்தில் நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டியில் 101 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றது.

அதே வேகத்துடன் 2வது போட்டியிலும் வென்று முன்னிலையை அதிகரிக்க இந்திய அணி தயாராகியுள்ளது. மறுபுறம் 74 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வியைச் சந்தித்த தென்னாப்பிரிக்கா 2வது போட்டியில் வென்று தொடரை சமன் செய்யத் தயாராகியுள்ளது. அதனால் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2வது போட்டி டிசம்பர் 11ஆம் தேதி இரவு 7:00 மணிக்கு நடைபெறுகிறது.

- Advertisement -

முல்லான்பூர் மைதானம்:

அப்போட்டி புதிய சண்டிகரில் இருக்கும் முல்லான்பூரில் உள்ள மகாராஜா யதவேந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இம்மைதானம் 2021இல் தோற்றுவிக்கப்பட்டு 38000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. அங்கே இப்போது தான் முதல் முறையாக ஒரு சர்வதேச ஆடவர் போட்டி நடைபெற உள்ளது.

வெதர் ரிப்போர்ட்:

முல்லான்பூரில் இன்று மழை பெய்வதற்கு வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. இரவில் வெப்பம் சராசரியாக 13 – 11 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று தெரிவதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:

முல்லான்பூர் மைதானத்தின் பிட்ச் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சாதகமாக இருந்து வருகிறது. புதிய பந்தில் வேகப் பந்து வீச்சாளர்கள் ஸ்விங் செய்து பவர்பிளே ஓவர்களில் சவாலைக் கொடுப்பார்கள். நேரம் செல்ல செல்ல பிட்ச் ஸ்லோவாக மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதனால் மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் ஆதிக்கத்தை செலுத்துவார்கள். 2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வது கடினமாகலாம்.

எனவே பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிப்பதற்கு சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் தங்களை மாற்றிக் கொண்டு விளையாடுவது அவசியமாகும். இதற்கு முன் இங்கு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் 200 ரன்களும் அடிக்கப்பட்டுள்ளன. சில அணிகள் 120 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகியும் உள்ளன.

இதையும் படிங்க: தெ.ஆ அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

இங்கு வரலாற்றில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 169. இங்கு 11 போட்டிகளில் 6 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும் 5 முறை சேசிங் செய்த அணிகளும் வென்றுள்ளன. இருப்பினும் பனியின் தாக்கத்தை கருத்தில் கொண்டு டாஸ் வெல்லும் கேப்டன் எம்முடிவை எடுத்தாலும் வெற்றிக்கு நன்றாக விளையாடுவது அவசியமாகிறது.

- Advertisement -