
இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 25 வருடங்கள் கழித்து தங்களது சொந்த மண்ணில் தோற்றது. அதற்கு அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுத்தது. அடுத்ததாக அவ்விரு அணிகள் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோத உள்ளன.
அத்தொடர் 2026 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் நோக்கத்தில் நடைபெற உள்ளது. அத்தொடரிலும் ஐசிசி டி20 தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியாவுக்கு வலுவான தென்னாப்பிரிக்கா சவாலைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த சவாலை சமாளித்து சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தொடரை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் 31 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்தியா 31 வெற்றிகளைப் பெற்று வலுவான நிலையில் இருக்கிறது. தென் ஆப்பிரிக்கா 12 வெற்றிகள் பெற்ற நிலையில் 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. இத்தொடர் நடைபெறும் இந்திய மண்ணில் அவ்விரு அணிகள் மோதிய 12 போட்டிகளில் இந்தியா 5 வெற்றிகள், தென் ஆப்பிரிக்கா 6 வெற்றிகள் பெற்றுள்ளன. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.
இத்தொடரின் முதல் போட்டி டிசம்பர் ஒன்பதாம் தேதி இரவு 7.00 மணிக்கு ஒடிசா மாநிலம் புபனேஸ்வரில் உள்ள கட்டாக் நகரில் இருக்கும் பரபதி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. 45000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இம்மைதானத்தில் 2015 முதல் டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளிலும் விளையாடியுள்ள இந்தியா 1 வெற்றி 2 தோல்விகளைச் சந்தித்துள்ளது. குறிப்பாக 2015, 2022இல் இங்கு தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்ட 2 போட்டிகளிலும் இந்தியா தோற்றுள்ளது.
இப்போட்டி நடைபெறும் கட்டாப் நகரில் டிசம்பர் 9ஆம் தேதி மழைக்கு வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது. வெப்பம் 15 – 27 டிகிரி செல்சியஸில் இருக்கலாம். வானம் மேகமூட்டத்துடன் மட்டுமே இருக்கும் என்பதால் போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.
கட்டாக் பிட்ச், பேட்டிங் ஆகிய இரண்டுக்கும் சாதகமாக இருக்கும். ஆரம்பத்தில் இருக்கக்கூடிய நல்ல, வேகம், பவுன்ஸ் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கலாம். மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். எனவே பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்க பிட்ச்சை கணித்து விளையாடுவது அவசியமாகிறது.
இதையும் படிங்க: அந்த தோல்விக்கு பின் இந்தியா உலக டி20யின் ட்ரெண்ட் செட்டரா மாறிட்டாங்க.. பில் சால்ட் பாராட்டு
இங்கு வரலாற்றில் நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 140. இங்கு 1 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும் 2 முறை சேசிங் செய்த அணிகளும் வென்றுள்ளன. இப்போட்டி இரவில் நடைபெறுவதால் பனியை கருத்தில் கொண்டு டாஸ் வெல்லும் கேப்டன் சேசிங் செய்வது வெற்றிக்கு வித்திடலாம்.