- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs PAK : இந்தியா பாகிஸ்தான் முன்னோட்டம், வரலாற்று புள்ளிவிவரம் – அதிக ரன்கள், அதிக விக்கெட் (லிஸ்ட் இதோ)

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் தற்போது துவங்கியுள்ள சூப்பர் 12 சுற்றில் அக்டோபர் 23ஆம் தேதியன்று அனவரும் காத்திருக்கும் பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் கௌரவமாக கருதி வெற்றி பெற போராடுவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதே இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளின் தனித்துவமாகும்.

அதை விட 1992 முதல் தொடர்ச்சியாக உலகக் கோப்பைகளில் வென்று வந்த இந்தியாவை கடைசியாக துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் தோற்கடித்த பாகிஸ்தான் புதிய வரலாறு படைத்தது. அத்துடன் அதே துபாயில் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றிலும் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பியது. எனவே அந்த வரலாற்று தோல்விகளுக்கு இம்முறை ரோகித் சர்மா தலைமையிலான பதிலடி கொடுக்குமா என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- Advertisement -

முன்னோட்டம்:
பாகிஸ்தான்: மறுபுறம் வரலாற்றை மாற்றி எழுதிய வெற்றியால் முன்பை விட புத்துணர்ச்சியாக காணப்படும் பாகிஸ்தானுக்கு கடந்த முறை சரித்திர வெற்றி பெற காரணமாக இருந்த சாஹீன் அப்ரிடி காயத்திலிருந்து குணமடைந்து திரும்பியுள்ளது பெரிய பலமாகும். அவருடன் ஹரிஷ் ரவூப், நசீம் ஷா என வலுவான பந்து வீச்சு கூட்டணியை கொண்டுள்ள அந்த அணியில் சுழல் பந்து வீச்சு மற்றும் மிடில் ஆர்டர் பேட்டிங் ஆகிய இரண்டும் பலவீனமாக உள்ளது.

அதனால் டாப் ஆர்டரில் பாபர் – ரிஸ்வான் ஜோடி அடித்தால் மட்டுமே வெல்ல முடியும் என்ற நிலைமை அந்த அணியில் உள்ளது. ஆனால் அவர்களும் சமீப காலங்களில் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி பின்னடைவை ஏற்படுத்துகின்றனர். எனவே அந்த குறைகளை சரி செய்து கடந்த வருடம் போலவே இம்முறையும் மேஜிக் வெற்றி பெற பாகிஸ்தான் முயற்சிக்க உள்ளது.

- Advertisement -

இந்தியா: மறுபுறம் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக இருக்கும் இந்திய அணியில் பும்ரா காயத்தால் விலகியது மட்டுமே பின்னடைவாகும். ஏனெனில் சூரியகுமார், பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகியோரால் மிடில் ஆர்டர் மற்றும் பினிஷிங் துறையும் ராகுல், ரோஹித், விராட் ஆகியோரால் டாப் ஆர்டர் பேட்டிங்கும் வலுவாக உள்ளது. இதில் ஹாரீஸ் ரவூப், ஷாஹீன் அப்ரிடியை சற்று நிதானத்துடன் எதிர்கொள்ளவேண்டிய டாப் ஆர்டர் அதிரடியாக 50 – 80 ரன்களை எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தால் வெற்றி இந்தியாவின் பக்கம்.

அதே போல் ஸ்பின் மற்றும் ஆல் ரவுண்டர்கள் துறையில் அஷ்வின், அக்சர் படேல் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். எனவே பும்ரா இல்லாத பொறுப்பேற்று புவனேஸ்வர் குமார், ஷமி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வேகப்பந்து வீச்சு துறையை பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

- Advertisement -

புள்ளிவிவரங்கள்:
1. சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் இதுவரை 11 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 8 போட்டிகளில் வென்று இந்தியா வலுவான அணியாக திகழ்கிறது. பாகிஸ்தான் 3இல் வென்றுள்ளது.

2. குறிப்பாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இவ்விரு அணிகள் மோதிய 6 போட்டிகளில் 5இல் வென்ற இந்தியா வலுவான அணியாக திகழ்கிறது. பாகிஸ்தான் 1 போட்டியில் மட்டும் வென்றுள்ளது.

- Advertisement -

3. கடைசி 3 போட்டிகளில் பாகிஸ்தான் 2 வெற்றியும் இந்தியா 1 வெற்றியும் சந்தித்துள்ளன. மேலும் இம்முறை வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் இவ்விரு அணிகளும் மோதுகின்றன.

4. இவ்விரு அணிகள் மோதிய போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த டாப் 3 பேட்ஸ்மேன்களின் பட்டியல்:
1. விராட் கோலி : 406*
2. முஹம்மது ரிஸ்வான் : 193*
3. சோயப் மாலிக் : 164

5. இந்தியா – பாகிஸ்தான் மோதிய டி20 போட்டிகளில் இதுவரை யாரும் சதமடித்ததில்லை என்ற நிலைமையில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த டாப் 3 பேட்ஸ்மேன்கள்:
1. முஹம்மது ரிஸ்வான் : 79*, 2021
2. விராட் கோலி : 78*, 2014
3. கௌதம் கம்பீர் : 75, 2007

6. இவ்விரு அணிகள் மோதிய டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த டாப் 3 பவுலர்கள்:
1. உமர் குல் : 11
2. புவனேஸ்வர் குமார் : 10*
3. ஹர்திக் பாண்டியா : 8*

இதையும் படிங்க : பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் தமிழக வீரரான இவர் நிச்சயம் விளையாடுவார் – டிராவிட் போட்டுள்ள ஸ்கெட்ச்

7. இவ்விரு அணிகள் மோதிய போட்டிகளில் யாருமே இதுவரை 5 விக்கெட் ஹால் எடுத்ததில்லை என்ற நிலையில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்துள்ள டாப் 3 பவுலர்கள்:
1. முகமது ஆமீர் : 4/18
2. புவனேஸ்வர் குமார் : 4/26
3. உமர் குல்: 4/37

- Advertisement -
Published by