இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது அண்மையில் நடைபெற்று முடிந்த வேளையில் அடுத்ததாக மூன்று நாட்கள் இடைவெளியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாட இருக்கிறது. இதற்கான அட்டவணை ஏற்கனவே வெளியாகி இருந்தது.
இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட் தொடர் :
அதனை தொடர்ந்து ரோகித் சர்மா தலைமையிலான பதினைந்து பேர் கொண்ட இந்திய வீரர்களின் பட்டியலும் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே நியூசிலாந்து வீரர்கள் அறிவிக்கப்பட்டு தற்போது இந்தியா வந்தடைந்து பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோன்று இந்திய அணியும் தீவிர பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது எங்கு நடைபெறுகிறது? அதை அந்த தொடரை எந்த சேனலில் பார்க்கலாம்? என்பது குறித்த ஒளிபரப்பு தகவலை இங்கு காணலாம்.
அந்த வகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற அக்டோபர் 16-ஆம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் துவங்குகிறது. அதனை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியானது அக்டோபர் 24-ஆம் தேதி புனே மைதானத்தில் துவங்கி நடைபெற இருக்கிறது.
அதற்கு அடுத்து மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது நவம்பர் 1-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த மூன்று போட்டிகளும் இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு துவங்கும். இந்த போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை ஸ்போர்ட்ஸ் 18 நிறுவனம் பெற்றுள்ளதால் அந்த சேனலிலேயே இந்த தொடரை காணலாம்.
இதையும் படிங்க : 160 – 300 ரன்ஸ்.. தோனி, விராட், ரோஹித் செய்யாததை கம்பீர் – சூரியகுமார் ஆரம்பிச்சுருக்காங்க.. ஆகாஷ் சோப்ரா
அதே போன்று ஆன்லைனில் பார்க்க விரும்புவோர் ஜியோ சினிமாஸ் ஆப்பின் மூலம் பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்ல இந்த தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியம் என்பதால் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.



