IND vs NZ T20 : டி20 தொடரானது இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு துவங்கும்? – எந்த சேனலில் பார்க்கலாம்?

Pandya-and-Williamson
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் அரையிறுதி போட்டியோடு வெளியேறிய இந்திய அணி தற்போது அங்கிருந்து நேரடியாக நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை மறுதினம் நவம்பர் 18-ஆம் தேதி துவங்கி நவம்பர் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

INDvsNZ

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய டி20 கிரிக்கெட் அணியில் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, கே.எல் ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டி20 அணியின் கேப்டனாக இளம் ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா கேப்டனாகவும், துணை கேப்டனாக ரிஷப் பண்டும் டி20 தொடரில் அணியை வழிநடத்த உள்ளனர்.

இந்த டி20 போட்டிகளானது நடைபெறும் தேதிகளாவது : அதன்படி முதல் டி20 போட்டி நவம்பர் 18-ஆம் தேதி வெலிங்டன் மைதானத்திலும், இரண்டாவது டி20 போட்டியானது நவம்பர் 20-ஆம் தேதி மவுன்ட் மாங்கனியிலும், மூன்றாவது t20 போட்டி நவம்பர் 22-ஆம் தேதி நேப்பியரிலும் நடைபெற இருக்கின்றன.

DD Sports

இந்த மூன்று போட்டிகளுமே இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியாவில் எந்த ஒரு தனியார் தொலைக்காட்சியும் ஒளிபரப்பும் உரிமத்தை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதேவேளையில் டிடி ஸ்போர்ட்ஸ் சேனலில் இந்த போட்டிகளை இலவசமாக கண்டு களிக்கலாம். மேலும் ஆன்லைன் மூலம் காண விரும்புவோர் அமேசான் பிரைம் வீடியோ ஆப்பின் மூலம் கண்டு களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த தொடரை நாம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலோ அல்லது ஹாட் ஸ்டாரிலோ காண இயலாது.

இதையும் படிங்க : பாண்டியாவை கேப்டனாக நியமிப்பதில் அங்க தான் பிரச்சனையே இருக்கு – இந்திய அணியை எச்சரிக்கும் இர்பான் பதான்

அதன்படி இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியின் 16 வீரர்கள் கொண்ட பட்டியல் இதோ : 1) ஹார்திக் பாண்டியா, 2) சுப்மன் கில், 3) சூரியகுமார் யாதவ், 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) தீபக் ஹூடா, 6) வாஷிங்டன் சுந்தர், 7) ரிஷப் பண்ட், 8) இஷான் கிஷன், 9) சஞ்சு சாம்சன், 10) யுஸ்வேந்திர சாஹல், 11) குல்தீப் யாதவ், 12) ஹர்ஷல் பட்டேல், 13) முகமது சிராஜ், 14) புவனேஸ்வர் குமார், 15) அர்ஷ்தீப் சிங், 16) உம்ரான் மாலிக்.

Advertisement