IND vs NZ : ஒருநாள் தொடரானது இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு துவங்கும்? – எந்த சேனலில் பார்க்கலாம்?

IND-vs-NZ
- Advertisement -

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது ஹார்டிக் பாண்டியா தலைமையில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை நவம்பர் 25-ஆம் தேதி துவங்கி நவம்பர் 30-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான அணியிலும் இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

IND vs NZ 1

- Advertisement -

இதன் காரணமாக இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியே இந்த தொடரிலும் விளையாட இருக்கிறது. இந்த இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக ஷிகார் தவான் அணியை வழிநடத்த இருக்கிறார். அதேபோன்று ஹார்டிக் பாண்டியா நாடு திரும்பியுள்ளதால் துணை கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட இருக்கிறார்.

இந்நிலையில் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு துவங்கும்? எந்த மைதானங்களில் நடைபெறுகிறது? எந்த சேனலில் பார்க்கலாம்? என்பது குறித்த தெளிவான தகவலை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியானது நாளை நவம்பர் 25ஆம் தேதி ஆக்லாந்தில் நடைபெறுகிறது.

Napier-Ground

அதனை தொடர்ந்து நவம்பர் 27-ஆம் தேதி இரண்டாவது ஒருநாள் போட்டியானது ஹேமில்டன் நகரில் நடைபெற இருக்கிறது. அதனை தொடர்ந்து நவம்பர் 30-ஆம் தேதி கிரிஸ்ட்சர்ச் நகரில் மூன்றாவது ஒருநாள் போட்டியானது நடைபெற உள்ளது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அனைத்துமே இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதேபோன்று இந்த இந்தியா – நியூசிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் டிடி ஸ்போர்ட்ஸ் சேனலில் இலவசமாக நேரலையில் கண்டு களிக்கலாம். அதேபோன்று ஆன்லைனில் போட்டியை காண விரும்புவோர் ப்ரைம் வீடியோ ஆப்பின் மூலம் இந்த தொடரை கண்டுகளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் முழு வீரர்கள் பட்டியல் இதோ :

இதையும் படிங்க : IND vs BAN : வங்கதேச கிரிக்கெட் தொடரில் இருந்து விலகிய முன்னணி வீரர் – அதிகாரபூர்வ அறிவிப்பு

1) ஷிகார் தவான்(கேப்டன்), 2) சுப்மன் கில், 3) தீபக் ஹூடா, 4) சூரியகுமார் யாதவ், 5)ஷ்ரேயாஸ் ஐயர், 6) ரிஷப் பண்ட்(து.கேப்டன்), 7) சஞ்சு சாம்சன், 8) வாஷிங்க்டன் சுந்தர், 9) ஷர்துல் தாகூர், 10) யுஸ்வேந்திர சாஹல், 11) குல்தீப் யாதவ், 12) அர்ஷ்தீப் சிங், 13) தீபக் சாகர், 14) உம்ரான் மாலிக்.

Advertisement