- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2.30 மணி காத்திருந்து கைவிடப்பட்ட முதல்நாள் ஆட்டம்.. இரண்டாவது நாளாவது போட்டி நடைபெறுமா? – விவரம் இதோ

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது அக்டோபர் 16-ஆம் தேதி இன்று பெங்களூரு நகரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

முதல்நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதாக அறிவிப்பு :

ஆனால் கடந்த சில நாட்களாகவே பெங்களூரு நகரில் கன மழை பெய்து வருவதால் போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகம் இருந்தது. இந்நிலையில் இன்றைய போட்டியின் முதல் நாள் ஆட்டம் துவங்குவதற்கு முன்பிருந்தே பெய்து வந்த கனமழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

- Advertisement -

இந்த முதல் நாளில் இடையிடையே மழை நின்றாலும் தூரல் நிற்கவில்லை. இதன் காரணமாக இப்போட்டியின் முதல் செஷன் முழுவதுமாக பாதிக்கப்பட்ட வேளையில் உணவு இடைவேளை வரை போட்டி நடப்பதற்கான சாத்தியமே இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி மதியம் 2:30 மணி வரை மழை நிற்காமல் பெய்ததால் இந்த முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே எஞ்சி இருக்கிறது. அதனால் இந்த போட்டி மழை பாதிப்பு இல்லாமல் முற்றிலும் நடைபெறுமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமாவது திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பது குறித்த வானிலை அறிக்கை வெளியாகி உள்ளது. அந்த வகையில் நாளையும் பெங்களூர் நகரில் மழை பெய்வதற்கான 80 சதவீத வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டதால் நாளைய இரண்டாம் நாள் ஆட்டமும் கைவிடப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

இதையும் படிங்க : ரஞ்சிக் கோப்பை 2024: எல்லாரும் தமிழ்நாட்டை பாத்து கத்துக்கோங்க.. சௌராஷ்ட்ரா கேப்டன் உனட்கட் பாராட்டு

அப்படி இல்லை என்றாலும் போட்டியின் பெரும்பாலான பகுதி மழையால் பாதிக்கப்படும் என்றும் இடையிடையே மழை நின்றால் கூட இரண்டாம் நாள் ஆட்டத்திற்கு சாத்தியம் இல்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த முதல் டெஸ்ட் போட்டியின் முடிவு எட்டப்படாமல் கூட போகலாம்.

- Advertisement -