இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன. அத்தொடரின் முதல் போட்டி அக்டோபர் 16ஆம் தேதி பெங்களூரு நகரில் துவங்கியது. மழையால் தாமதமாக துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா மோசமாக விளையாடி 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதனால் சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்து இந்தியா மோசமான சாதனை படைத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 20 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய அபாரமாக விளையாடி 402 ரன்கள் குவித்தது.
சர்பராஸ் – கோலி அசத்தல்:
அந்த அணிக்கு அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா சதமடித்து 134, டேவோன் கான்வே 91, டிம் சௌதீ 65 ரன்கள் எடுத்தனர். இந்தியாவுக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதைத் தொடர்ந்து 356 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இந்தியாவுக்கு ரோகித் சர்மா – ஜெய்ஸ்வால் ஆகியோர் நிதானமாக விளையாடினர்
அந்த வகையில் 72 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் ஜெய்ஸ்வால் 35 ரன்களில் அஜஸ் படேல் சுழலில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் அசத்திய கேப்டன் ரோஹித் சர்மா அரை சதமடித்து 52 ரன்கள் எடுத்திருந்த போது அஜஸ் பட்டேல் சுழலில் துரதிஷ்டவசமாக போல்ட்டாகி சென்றார். அவர்களைத் தொடர்ந்து விராட் கோலி மற்றும் சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்தனர்.
இந்தியா தோல்வியில் தப்புமா:
முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டாகி இந்தியாவின் சரிவுக்கு காரணமான அவர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் பொறுப்புடன் விளையாடி சரிவை சரி செய்தனர். நேரம் செல்ல செல்ல நேர்த்தியாக விளையாடிய இந்த ஜோடியில் இருவருமே சதமடித்து நியூசிலாந்துக்கு சவாலை கொடுத்தனர். அதனால் மகிழ்ச்சியடைந்த இந்திய ரசிகர்கள் 3வது நாள் கடைசி ஓவரில் விராட் கோலி 70 ரன்களில் கிளன் பிலிப்ஸ் சுழலில் அவுட்டானதால் ஏமாற்றத்தை சந்தித்தனர்.
இதையும் படிங்க: இந்திய அணிக்கு எதிராக ரச்சின் ரவீந்திரா சதமடிக்க சி.எஸ்.கே செய்த உதவி தான் காரணம் – விவரம் இதோ
தற்போதைய நிலையில் மூன்றாவது நாள் முடிவில் 231-3 ரன்கள் எடுத்துள்ள இந்தியா இன்னும் 125 ரன்கள் பின்தங்கியுள்ளது. களத்தில் சர்பராஸ் கான் 70* ரன்களுடன் உள்ளார். முன்னதாக இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 3வது பேட்டிங் இடத்தில் விராட் கோலி ஒரு முறை கூட அரை சதமடித்ததில்லை. ஆனால் தம்முடைய கேரியரில் இதற்கு முன் முடியாததை இன்று முடித்த விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 9000 ரன்கள் குவித்த நான்காவது இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்தார். அந்த பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர்: 15921
2. ராகுல் டிராவிட்: 13265
3. சுனில் கவாஸ்கர்: 10122
4. விராட் கோலி: 9000*
5. விவிஎஸ் லக்ஷ்மன்: 8781



