நியூஸிலாந்து 180/3.. பேட்டிங்கை விட இந்தியா ஃபீல்டிங் மோசம்.. ராகுல், சர்பராஸை கெட்ட வார்த்தையில் திட்டிய ரோஹித்

- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி பெங்களூரு நகரில் அக்டோபர் 16ஆம் தேதி துவங்கியது. மழையால் 2வது நாள் தாமதமாக துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி மோசமாக விளையாடி 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய சொந்த மண்ணில் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்து இந்தியா மோசமான சாதனை படைத்தது. மேலும் நியூசிலாந்துக்கு எதிராக முறையாக 50 ரன்களுக்குள் அவுட்டான இந்தியா குறைந்தபட்ச ஸ்கோரையும் இந்தியா பதிவு செய்தது.

- Advertisement -

மொத்தமாக சொதப்பல்:

விராட் கோலி, கேஎல் ராகுல், சர்பராஸ் கான் டக் அவுட்டான நிலையில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 13, ரிஷப் பண்ட் 20 ரன்கள் எடுத்தனர். அனல் பறக்க பந்து வீசிய நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 5, வில்லியம் ஓரோர்கே 4 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து இரண்டாவது நாள் முடிவில் 180-3 ரன்கள் குவித்துள்ளது.

அந்த அணிக்கு கேப்டன் லாதம் 15, வில் எங் 33 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் மறுபுறம் அசத்திய டேவோன் கான்வே சதத்தை நழுவ விட்டாலும் 91 ரன்கள் குவித்து அஸ்வின் சுழலில் போல்டானார். அதனால் 134 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான துவக்கத்தை பெற்றுள்ள நியூஸிலாந்துக்கு களத்தில் டேரில் மிட்சேல் 14*, ரச்சின் ரவீந்திரா 22* ரன்களுடன் உள்ளனர்.

- Advertisement -

கோபமான ரோஹித்:

முன்னதாக இந்தப் போட்டியில் சிராஜ் வீசிய 13வது ஓவரின் 2வது பந்தை டாம் லாதம் சரியாக அடிக்காமல் எட்ஜ் கொடுத்தார். அது ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்த விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரை சென்றது. அப்போது பந்து ராகுலை நோக்கி செல்கிறது என்பதை உணர்ந்த விராட் கோலி எப்படியும் அவர் பிடித்து விடுவார் என்ற நம்பிக்கையுடன் அதற்கு வழிவிட்டார்.

இதையும் படிங்க: விக்கெட் கீப்பிங் செய்ய முடியாமல் பாதியிலேயே வெளியேறிய ரிஷப் பண்ட் – என்ன நடந்தது?

ஆனால் தம்மை நோக்கி வந்த கேட்ச்சை பிடிக்காமல் விட்ட ராகுல் “திடீரென ஒரு பொருள் நம்மை நோக்கி வந்தால் எப்படி ரியாக்சன் கொடுப்பமோ?” அதே போன்ற ரியாக்சனை கொடுத்தார். அதனால் கோபமடைந்த கேப்டன் ரோஹித் சர்மா “என்ன இது?” என்ற வகையில் ரியாக்சன் கொடுத்தார். அதே போல மற்றொரு தருணத்தில் சர்பராஸ் கான் பந்தை சரியாக பிடிக்கவில்லை. அதனால் பிரபல இந்தி கெட்ட வார்த்தையில் ரோகித் சர்மா கடுமையாக திட்டினார். மொத்தத்தில் 2வது நாளில் பேட்டிங்கை விட இந்தியாவின் ஃபீல்டிங் மோசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement