IND vs IRE : அயர்லாந்துக்கும் போயும் விடாத அச்சுறுத்தல் – தொடர் முழுதாக நடக்குமா? வெளியான வெதர் ரிப்போர்ட் இதோ

Rain-1
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கு பின் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2 – 2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. கேப்டன் ரோகித் சர்மா போன்ற முக்கிய நட்சத்திரங்கள் ஓய்வெடுத்த அந்த தொடரில் கடைசி நேரத்தில் காயத்தால் விலகிய கேஎல் ராகுலுக்கு பதில் திடீரென ரிஷப் பண்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அவரது தலைமையில் சமீபத்திய ஐபிஎல் தொடரில் அசத்திய வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்து அதிர்ச்சி தோல்விகளை சந்தித்து தலைகுனிவுக்கு உள்ளாகி ஆரம்பத்திலேயே பின்தங்கியது.

IND vs RSA Rishabh Pant Keshav Maharaj

- Advertisement -

அதனால் ஏற்பட்ட விமர்சனங்களுக்கு அஞ்சாத இந்திய அணியினர் அடுத்த 2 போட்டிகளில் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் கச்சிதமாக செயல்பட்டு சொந்த மண்ணில் அவ்வளவு எளிதில் சாய மாட்டோம் என்று தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்தனர். ஆனால் வெற்றியாளரை தீர்மானிக்க பெங்களூருவில் நடைபெற்ற கடைசி போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் இரு அணிகளும் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு கோப்பை பகிர்ந்து கொடுக்கப்பட்டது.

அயர்லாந்து தொடர்:
அதை தொடர்ந்து அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியினர் அங்கு அந்த அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. வரும் ஜூலை 1-ஆம் தேதியன்று பர்மிங்காம் நகரில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்க ரிஷப் பண்ட் சென்றதால் ஜூன் 26, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த தொடரில் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத போதிலும் 487 ரன்கள் மற்றும் 8 விக்கெட்களை எடுத்து ஆல்-ரவுண்டராக அசத்தியதுடன் அனைத்து வீரர்களையும் அற்புதமாக வழிநடத்தி முதல் வருடத்திலேயே ஐபிஎல் கோப்பையை காட்டிய ஹர்திக் பாண்டியா முதல் முறையாக இந்திய அணியை வழிநடத்துகிறார்.

Dinesh Karthik and Hardik Pandya

மேலும் இந்த தொடருக்கு பயிற்சியாளராக ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் செயல்படும் நிலையில் ஏறக்குறைய தென் ஆப்ரிக்க தொடரில் கலக்கிய தினேஷ் கார்த்திக், புவனேஸ்வர் குமார் ஆகியோருடன் மீண்டும் இடம் பெற்றுள்ளனர். மேலும் ஐபிஎல் 2022 தொடரில் அசத்திய போதிலும் வாய்ப்பு பெறாத ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன் ஆகியோரும் இடம் பிடித்துள்ளார்கள். அவர்களுடன் தென் ஆப்ரிக்க தொடரில் வாய்ப்பு பெறாத உம்ரான் மாலிக், அர்ஷிதீப் சிங் ஆகியோருக்கு இந்த தொடரில் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் ஒரு வழியாக வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

அயர்லாந்தில் மழை:
மொத்தத்தில் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் தரமான வீரர்களை கண்டறியும் ஒரு தொடராக இந்த தொடர் பார்க்கப்படுகிறது. அதனால் இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி இந்தியாவுக்காக விளையாட காத்திருக்கும் இந்த தொடர் மழையால் முழுமையாக நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளதை பற்றி பார்ப்போம்.

IND-vs-IRE

1. ஆம் இந்த தொடரின் 2 போட்டிகளும் அயர்லாந்தின் தலைநகரான டப்ளின் நகரில் உள்ள வில்லேஜ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் மாலஹைட் நகரில் உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கும் இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கும் நடைபெற உள்ளது.

- Advertisement -

2. ஆனால் இந்த தொடர் நடைபெறும் ஜூன் 26, 28 ஆகிய 2 நாட்களிலுமே அங்கு நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவிக்கிறது. அந்த 2 நாடுகளிலுமே சராசரியாக 60 – 80% மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது.

Rain

3. குறிப்பாக ஜூன் 26இல் துவங்கும் முதல் போட்டியில் உள்ளூர் நேரப்படி மாலை 4 மணியளவில் 70% என இருக்கும் மழைக்கான வாய்ப்பு 5 மணிக்கு 55% 6 மணிக்கு 31% 7 மணிக்கு 15% என படிப்படியாக குறையும் என்று தெரிகிறது. இதனால் முதல் போட்டி மழையால் தாமதத்துடன் துவங்கி ஒருசில ஓவர்கள் குறைக்கப்பட்டு நடைபெறும் என்று நம்பலாம்.

- Advertisement -

4. ஆனால் ஜூன் 27இல் விடுமுறை போல் குறைவான வாய்ப்புள்ள மழை மீண்டும் ஜூன் 28இல் வெளுத்து வாங்க காத்திருக்கிறது. ஆம் 2-வது போட்டியன்று உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணி அளவில் 80% என இருக்கும் மழைக்கான வாய்ப்பு இரவு 10 மணி வரை கொஞ்சமும் குறையாமல் 70 சதவீதமாக இருக்கும் என தெரிவதால் 2-வது போட்டி முழுமையாக ரத்து செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : சிஎஸ்கே செய்யும் அதே அநியாயம், முதலமைச்சரை பேச சொல்லட்டுமா – கேகேஆரை எச்சரிக்கும் முன்னாள் வீரர்

அயர்லாந்து போன்ற நாட்டிற்கு எப்போதாவதுதான் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. சொல்லப்போனால் 2018க்கு பின் முதல் முறையாக தற்போது அங்கு இந்தியா விளையாடும் நிலையில் தென் ஆப்பிரிக்க தொடரை முடிக்க விடாமல் பெங்களூருவில் கடைசி போட்டியில் அடித்து நொறுக்கிய மழை நேராக அயர்லாந்துக்கு சென்றதை போல் மீண்டும் அச்சுறுத்தலை கொடுக்க காத்திருக்கிறது. இதை அறியும் ரசிகர்கள் இந்த தொடர் மழை

Advertisement