IND vs IRE : அயர்லாந்து டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் – முழு லிஸ்ட் இதோ

IND
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரோஹித் சர்மா தலைமையிலான முதன்மை இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்ட வேளையில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியானது அந்த அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரை மூன்றுக்கு இரண்டு (3-2) என்ற கணக்கில் இழந்தது.

அடுத்ததாக இந்திய அணியானது அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான அணியில் முதன்மை அணியோடு சேர்த்து ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில், இஷான் கிஷன் ஆகிய வீரர்களுக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதன் காரணமாக ஐபிஎல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, ஜிதேஷ் ஷர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் இந்த அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் வாய்ப்பினை பெற்றுள்ளனர். அதன்படி ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள மொத்த வீரர்களின் பட்டியலை மீண்டும் ஒருமுறை இங்கே முழுவதுமாக காணலாம்.

இந்த தொடருக்கான கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், துணை கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். அவர்களை தவிர்த்து யாஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஜித்தன் சர்மா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். மேலும் ஆல்ரவுண்டர்களாக சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், சபாஷ் அகமது ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

- Advertisement -

பந்துவீச்சாளர்களாக ரவி பிஷ்னாய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். அந்த வகையில் இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியின் முழு வீரர்களின் பட்டியல் இதோ :

இதையும் படிங்க : சஞ்சு சாம்சன் மேல தப்பில்ல, ஒன்னு ரிங்குவை யூஸ் பண்ணுங்க இல்ல அவரை கழற்றி விடுங்க – முன்னாள் வீரர் கோபமான பேட்டி

1) ஜஸ்பிரீத் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், 3) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 4) திலக் வர்மா, 5) ரிங்கு சிங், 6) சஞ்சு சாம்சன், 7) ஜிதேஷ் சர்மா, 8) ஷிவம் துபே, 9) வாஷிங்க்டன் சுந்தர், 10) ஷாபாஸ் அகமது, 11) ரவி பிஷ்னாய், 12) பிரசித் கிருஷ்ணா, 13) அர்ஷ்தீப் சிங், 14) முகேஷ் குமார், 15) ஆவேஷ் கான்.

Advertisement