IND vs IRE : 2 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – அணியில் ஏற்படவுள்ள 2 மாற்றங்கள்

Avesh-Khan
- Advertisement -

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி நேற்று முன்தினம் டப்ளின் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்திய இந்திய அணியானது இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று அதே டப்ளின் நகரில் நடைபெற உள்ளது.

IND vs IRE

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணியும், இந்த போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை சமன் செய்யும் முனைப்பில் அயர்லாந்து அணியும் தீவிரமாக பயிற்சி எடுத்து வருவதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தில் உள்ளது.

இருப்பினும் பலம் வாய்ந்த இந்திய அணி எளிதாக அயர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெறும் என்பதே நிதர்சனமான உண்மை. இந்நிலையில் இந்த இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கிறதா என்று அனைவரும் எதிர்பார்த்து வரும் வேளையில் இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை நாங்கள் இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

chahal deepak hooda IND vs IRE

அதன்படி கடந்த முதலாவது டி20 போட்டியில் காயம் அடைந்த துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட்க்கு பதிலாக சஞ்சீவ் சாம்சன் அணியில் இணைவார் என்று தெரிகிறது. அதேபோன்று முதல் போட்டியில் உம்ரான் மாலிக் அறிமுக வாய்ப்பினை பெற்றது போல இந்த இரண்டாவது போட்டியில் ஆவேஷ் கானுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் அறிமுக வாய்ப்பினை பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

எனவே இன்றைய இரண்டாவது டி20 போட்டியின் பிளேயிங் லெவனில் நிச்சயம் இரண்டு மாற்றங்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இன்றைய இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : ENG vs NZ : டெஸ்ட் சாம்பியனுக்கே இந்த கதின்னா, நம்ம நிலைமை – இங்கிலாந்து உலகசாதனை வெற்றி

1) இஷான் கிஷன், 2) தீபக் ஹூடா, 3) சஞ்சு சாம்சன், 4) சூர்யகுமார் யாதவ், 5) ஹார்டிக் பாண்டியா, 6) தினேஷ் கார்த்திக், 7) அக்சர் படேல், 8) புவனேஷ்வர் குமார், 9) அர்ஷ்தீப் சிங், 10) புவனேஷ்வர் குமார், 11) யுஸ்வேந்திர சாஹல்

Advertisement