IND vs IRE முதல் டி20: மழையின் குறுக்கீட்டையும் தாண்டி அயர்லாந்தை தெறிக்கவிட்ட இந்தியா, வென்றது எப்படி – முழுவிவரம் இதோ

Deepak Hooda Dinesh karthik IND vs IRE
- Advertisement -

அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு அந்த அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் வீரர்கள் ஜூலை 1இல் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் களமிறங்குவதால் சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரில் அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பதவியில் ஆல்-ரவுண்டராக அசத்தி கோப்பையை வென்று காட்டிய ஹர்திக் பாண்டியா முதல் முறையாக இந்த இந்த தொடரில் இந்தியாவின் கேப்டனாக செயல்படுகிறார். அவருக்கு உறுதுணையாக ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் மேற்பார்வையில் ஜூன் 26-ஆம் தேதியன்று அயர்லாந்தின் தலைநகர் டப்ளின் நகரில் இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டி துவங்கியது.

Umran Malik IND vs IRE

- Advertisement -

அதில் ரிஷப் பண்ட் போல் அல்லாமல் முதல் போட்டியிலேயே டாப் அதிர்ஷ்டத்தை வென்ற கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அத்துடன் ஒருவழியாக ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த 22 வயது இளம் அதிரடி வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் இந்தியாவுக்காக அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்றார். சீனியர் பவுலர் புவனேஸ்வர் குமாரிடம் தனது தொப்பியை பெற்ற அவருடன் ஷ்ரேயஸ் ஐயருக்கு பதிலாக தீபக் ஹூடா அணியில் மாற்றமாக சேர்க்கப்பட்டார்.

குறுக்கிட்ட மழை:
ஆனால் டாஸ் வீசைப்பட்டதும் ஜோராக வந்த மழை இந்த தொடரை ஆரம்பத்திலேயே குறுக்கிட்டுத் தடுத்து நிறுத்தியது. அதனால் மைதானத்திற்கு வந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சோகமடைந்து 2018க்குப் பின் நடைபெறும் இந்த தொடரை எப்படியாவது நடத்த வழி விடுமாறு வைத்த பிரார்த்தனையை மீது கருணை காட்டிய மழை ஒரு மணி நேரத்துக்கு பின்பாக நின்றது. அதனால் தலா 12 ஓவர்கள் கொண்ட போட்டியாக ஒரு வழியாக இரவு 11.20 மணிக்கு இப்போட்டி துவங்கியது. அதில் ஆரம்பத்திலேயே அற்புதமாக பந்துவீசிய இந்தியா அயர்லாந்து கேப்டன் ஆண்டி பால்பிரின் 0 (2), பால் ஸ்டிர்லிங் 4 (5), காரெத் டிலேணி 8 (9) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை ஒற்றை இலக்க ரன்களில் அவுட் செய்து மிரட்டியது.

chahal deepak hooda IND vs IRE

அதனால் 3.5 ஓவரில் 22/3 என திணறிய அந்த அணிக்கு ஜோடி சேர்ந்த லோர்கன் டக்னர் – ஹேரி டெக்டர் நிதானமாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்து 4-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்தார்கள். ஒருபுறம் 18 (16) ரன்களை எடுத்த டூக்கர் பொறுமையாக பேட்டிங் செய்து ஆட்டமிழக்க மறுபுறம் 6 பவுண்டரி 3 சிக்சர்களை தெறிக்கவிட்ட டெக்டர் 64* (33) ரன்களை போராடி எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் மிரட்டினார். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவர்களில் அயர்லாந்து 108/4 ரன்களை எடுத்து அசத்தியது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் கேப்டன் அசத்திய கேப்டன் பாண்டியா, புவனேஸ்வர் குமார், ஆவேஷ் கான், சஹால் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

- Advertisement -

மிரட்டல் சேசிங்:
அதை தொடர்ந்து 109 என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு சமீபத்திய தென் ஆப்ரிக்க தொடரில் களமிறங்கி தடுமாறிய ருதுராஜ்க்கு பதில் தீபக் ஹூடா – இஷான் கிசான் ஆகியோர் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கினர். அதில் 3 பவுண்டரி 2 சிக்சர்கள் பறக்கவிட்டு 26 (13) ரன்களில் இஷான் கிசான் அவுட்டாக அடுத்ததாக காயத்திலிருந்து குணமடைந்தது திரும்பிய சூர்யகுமார் யாதவ் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அதனால் 30/2 என சுமாரான தொடக்கத்தை பெற்ற இந்தியாவுக்கு அடுத்ததாக களமிறங்கி 1 பவுண்டரி 3 சிக்சர்களை பறக்கவிட்ட ஹர்திக் பாண்டியா வெற்றியை உறுதி செய்து 24 (12) ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆனால் மறுபுறம் நங்கூரமாக நின்ற தீபக் ஹூடா 6 பவுண்டரி 2 சிக்சருடன் கடைசி வரை அவுட்டாகாமல் 47* (29) ரன்கள் எடுக்க இறுதியில் தினேஷ் கார்த்திக் 5* (4) ரன்கள் எடுத்து வழக்கமான பினிசிங் கொடுத்தார். அதனால் 9.2 ஓவரிலேயே 111/3 ரன்கள் எடுத்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1 – 0* (2) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இந்தத் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. அயர்லாந்து சார்பில் அதிகபட்சமாக கிரைக் எங் 2 விக்கெட்டுகள் எடுத்தார். 1 விக்கெட் எடுத்த சஹால் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

வெற்றிப்பயணம்:
முக்கிய நட்சத்திரங்கள் இல்லாத இப்போட்டியில் ஐபிஎல் தொடரை போலவே கேப்டனாக பொறுப்பேற்று முன்னின்று வழி நடத்திய ஹர்திக் பாண்டியா ஆரம்பத்திலேயே பந்து வீசி 1 விக்கெட்டை எடுத்து பேட்டிங்கில் 24 ரன்கள் எடுத்தது இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது. அதேபோல் டெக்டர் தவிர ஏனைய அயர்லாந்து பேட்ஸ்மேன்களை பெரிய ரன்கள் எடுக்க விடாமல் இந்திய பவுலர்கள் முடிந்த அளவுக்கு சிறப்பாக கட்டுப்படுத்தினர்.

Laxman

அதைவிட யாருமே எதிர்பாராத வகையில் தொடக்க வீரராக களமிறங்கி அயர்லாந்து பவுலர்களை வெளுத்து வாங்கிய தீபா ஹூடா மற்றும் இஷான் கிசான் ஆகியோர ரன் ரேட்டை எகிற விடாமல் வெற்றியாக எளிதானதாக மாற்றினார். மொத்தத்தில் இந்த தொடரில் புதிய கேப்டன் ஹர்டிக் பாண்டியா தலைமையில் காலடி வைத்துள்ள இந்தியா வெற்றி பயணத்தை மழையின் குறுக்கீட்டையும் தாண்டி துவங்கியுள்ளது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement