சேப்பாக்கத்தில் நடைபெறயிருக்கும் டி20 போட்டி.. டிக்கெட் விலை மற்றும் தேதி அறிவிப்பு – விவரம் இதோ

Chepauk
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக இங்கு நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக நடைபெறும் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேப்பாக்கம் டி20 போட்டிக்கான டிக்கெட் விற்பனை :

இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக டி20 போட்டிகளும், அதற்கு அடுத்து ஒருநாள் போட்டிகளும் நடைபெற இருக்கின்றன. இந்த தொடரின் முதல் டி20 போட்டியானது ஜனவரி 22-ஆம் தேதி கொல்கத்தா நகரில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்குகிறது.

- Advertisement -

அதனைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது எதிர்வரும் ஜனவரி 25-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் சேப்பாக்கம் மைதானத்தில் டி20 போட்டி நடைபெறவுள்ளது ரசிகர்கள் மத்தியிலும் அதிகளவு கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டிக்கான டிக்கெட் விலை என்ன? டிக்கெட் விற்பனை எப்போது துவங்கும்? என்பது குறித்த சில விரிவான தகவலை இங்கு காணலாம்.

- Advertisement -

அந்த வகையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த இரண்டாவது டி20 போட்டியானது ஜனவரி 25-ஆம் தேதி நடைபெற இருக்கும் வேளையில் ஜனவரி 12-ஆம் தேதி முதல் டிக்கெட் விற்பனை துவங்கும் என சேப்பாக்கம் மைதான நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இங்கிலாந்து தொடரில் இருந்து விலகவுள்ள இந்திய நட்சத்திர வீரர் கே.எல் ராகுல் – காரணம் இதோ

மேலும் இந்த சேப்பாக்கம் டி20 போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலையாக 1500 ரூபாயில் இருந்து, அதிகபட்ச டிக்கெட் விலையாக 12000 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement