
நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த சூப்பர் 8 சுற்று போட்டிகளின் முடிவில் நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. அந்த வகையில் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதி சுற்று போட்டிகளில் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றன.
அந்த வகையில் நாளை மார்ச் நான்காம் தேதி நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அதன்பிறகு மார்ச் 5-ஆம் தேதி அன்று மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் இரண்டாவது அரையிறுதி போட்டியில் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றன.
இந்நிலையில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது அரையிறுதி போட்டி மழையால் ரத்தானால் எந்த அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்? என்கிற கருத்து சமூக வலைத்தளத்தில் பெரியளவில் பேசப்படும் விடயமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இரண்டாவது அரையிறுதி போட்டி ரத்தானால் என்ன முடிவு எடுக்கப்படும்? ஐசிசி அந்த போட்டிக்கான விதிமுறைகளில் கூறுவது என்ன? என்பதை இந்த பதிவில் காணலாம்.
அந்த வகையில் இரண்டாவது அரையிறுதி போட்டியானது மழையால் முற்றிலுமாக கைவிடப்பட்டால் சூப்பர் 8 சுற்றில் அதிக புள்ளிகளை பெற்ற அணியே இறுதிப் போட்டிக்கு செல்லும். அந்த வகையில் சூப்பர் 8 சுற்றில் ஏற்கனவே இங்கிலாந்து அணி 3 வெற்றிகளை பிடித்து முதலாவது அணியாகவும், இந்திய அணி 2 போட்டியில் வெற்றி பெற்று இரண்டாவது அணியாகவும் இடம்பிடித்து உள்ளதால் இங்கிலாந்து அணியே இறுதிப் போட்டிக்கு செல்ல வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க : கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தவறு.. சஞ்சு சாம்சன் அரையிறுதி போட்டியில் நீக்கமா? – ஐ.சி.சி சொல்வது என்ன?
இருந்தாலும் போட்டி நடைபெறும் நாளில் போதிய நேரம் இருந்து குறைந்த பட்சம் 10 ஓவர்கள் போட்டியாவது நடைபெற வேண்டும். அப்படி நடைபெறவில்லை என்றால் அடுத்த நாள் ரிசர்வ் டே ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ரிசர்வ் டேவிலும் போட்டி மழையால் கைவிடப்பட்டால் மட்டுமே இந்த விதிமுறைகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.