இங்கிலாந்து அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – லிஸ்ட் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் சமீபத்தில் முடிந்தது. இந்தியா 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.அதன் பின்னர் தற்பொழுது டி20 தொடர் நடைபெற்று வருகிறது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-2 என தொடர் தற்சமயம் நடுநிலையில் உள்ளது. இந்நிலையில் இன்று வெற்றியை தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று நடக்க இருக்கிறது. டி20 தொடர் முடிந்த பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது இதற்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் நேற்று வெளியானது.

INDvsENG

- Advertisement -

இந்திய அணி கடைசியாக விளையாடிய 2 ஒருநாள் தொடர்களிலும் தோல்வி அடைந்தது அனைவருக்கும் தெரியும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-2 என்கிற கணக்கில் தோல்வியடைந்தது.அதற்கு முன்னர் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு போட்டி கூட ஜெயிக்காமல் ஒயிட்வாஷ் ஆனது. மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி கடைசியாக 2018 ஆம் ஆண்டு நடைபெற்றது அந்த தொடரிலும் இந்திய அணி 1-2 என்கிற கணக்கில் தோல்வி அடைந்தது.

எனவே இவை எல்லாம் கணக்கில் வைத்துக்கொண்டு ஒருநாள் தொடரை வெல்லும் அளவில் இந்திய அணி வீரர்களை இந்திய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்து வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்திய அணி வீரர்கள் பட்டியல் :

- Advertisement -

கேப்டன் விராட் கோலி , வைஸ் கேப்டன் ரோகித் சர்மா , ஷிகர் தவன் , சுப்மன் கில் , சூர்யகுமார் யாதவ் , ஸ்ரேயாஸ் ஐயர் , ஹர்திக் பாண்டியா , ரிஷப் பண்ட் , கே எல் ராகுல் , சாஹால் , குல்தீப் யாதவ் , குருனல் பாண்டியா , வாஷிங்டன் சுந்தர் , புவனேஸ்வர் குமார் , முகமது சிராஜ் , ஷர்துல் தாகூர் , பிரசித் கிருஷ்ணா, நடராஜன்.

IND-vs-ENG

இந்தப் பட்டியலில் கேப்டன் விராட் கோலி மீது அனைவரது கண்களும் உள்ளது. 2019 முதல் எந்தவித செஞ்சுரியும் இதுவரை ஒருநாள் போட்டிகளில் கோஹ்லி அடிக்கவில்லை. எனவே இந்த தொடரில் அவர் செஞ்சுரி அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிராக நல்ல பார்மில் உள்ள ரோகித் சர்மா , புதிதாக கலந்து கொண்டுள்ள அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் , டி20 தொடரில் அதிரடியாக விளையாடி வரும் ஷ்ரேயாஸ் , மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள ஹர்திக் பாண்டியா , அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்ட் என பேட்டிங்கில் அனைத்து வகையிலும் இந்திய அணி சிறப்பாக உள்ளது.

ind

பவுலிங்கில் ஸ்பின்னை பொருத்தவரை சஹால் , குல்தீப் யாதவ் மற்றும் க்ருனால் பாண்டியா இருக்கின்றனர். வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் புவனேஸ்வர் குமார் , யார்க்கர் மன்னன் நடராஜன் , முகமது சிராஜ் மற்றும் தாகூர் ஒருபுறம் இருக்க புதிதாக களமிறங்கவுள்ள பிரசித் கிருஷ்ணா என வேகப்பந்து வீச்சில் இந்திய அணி அசத்த காத்துள்ளது.

Advertisement