- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியா – இங்கிலாந்து 5வது டி20 நடைபெறும் வான்கடே மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

இங்கிலாந்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரில் முதல் 2 போட்டிகளில் வென்ற இந்திய அணியை மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து தோற்கடித்தது. ஆனால் 4வது போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா 3 – 1* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது.

இதைத் தொடர்ந்து 5வது போட்டியிலும் வென்று வெற்றியுடன் தொடரை நிறைவு செய்ய இந்தியா தயாராகி உள்ளது. மறுபுறம் கடைசி போட்டியில் வென்று ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்ய இங்கிலாந்து தயாராக உள்ளது. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கடைசிப் போட்டி பிப்ரவரி 2ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7:00 மணிக்கு துவங்குகிறது.

- Advertisement -

வான்கடே மைதானம்:

1975இல் தோற்றுவிக்கப்பட்டு 32000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளைக் கொண்ட இந்த மைதானத்தில் 2012 முதல் சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் இதுவரை நடைபெற்ற 8 போட்டிகளில் 5இல் விளையாடியுள்ள இந்தியா 3 வெற்றி 2 தோல்விகளை சந்தித்துள்ளது. இங்கே 2 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி 1 தோல்வியை சந்தித்துள்ள இங்கிலாந்து முதல் முறையாக இம்முறை இந்தியாவை எதிர்கொள்கிறது.

வெதர் ரிப்போர்ட்:

பிப்ரவரி 2ஆம் தேதி மும்பை நகரில் மழை பெய்வதற்கு வாய்ப்பு இல்லை என்று இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது. எனவே இந்தப் போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:

வான்கடே மைதானம் சர்வதேச கிரிக்கெட்டிலும் ஐபிஎல் தொடரிலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்து வருவதை பார்த்து வருகிறோம். இங்கே சிறப்பான பவுன்ஸ் இருக்கும். அதே போல மைதானத்தின் பவுண்டரி அளவுகளும் சிறியதாக இருக்கும். எனவே அதைப் பயன்படுத்தி திறமையை வெளிப்படுத்தும் பேட்ஸ்மேன்கள் எளிதாக பெரிய ரன்கள் குடிக்க முடியும்.

இதையும் படிங்க: 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வெல்ல இந்தியா – ஆஸிக்கு வாய்ப்பிருக்கு.. போட்டிக்கு அவங்களும் வருவாங்க.. பாண்டிங் கணிப்பு

அதே சமயம் இப்போட்டி இரவு நேரத்தில் நடைபெறுவதால் குளிர்வான சூழ்நிலைகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். மிடில் ஓவர்களில் துல்லியமாக பவுலிங் செய்யும் ஸ்பின்னர்கள் விக்கெட்டுகளை எடுப்பார்கள். வரலாற்றில் மொத்தமாக இங்கே நடைபெற்ற 12 சர்வதேச டி20 போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 172 ஆகும். இங்கு முதலில் பேட்டிங் செய்த அணிகள் 5 முறையும் சேசிங் செய்த அணிகள் 7 முறையும் வென்றுள்ளன. எனவே பனியின் தாக்கத்தை கருத்தில் கொண்டு இம்முறையும் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பவுலிங் செய்து சிறப்பாக செயல்படுவது வெற்றியை கொடுக்கலாம்.

- Advertisement -