இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகின்றன. அந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து மூன்றாவது போட்டியிலும் வென்று தொடரை ஆரம்பத்திலேயே கைப்பற்ற இந்திய அணி தயாராகி வருகிறது.
மறுபுறம் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இங்கிலாந்து தொடரை வெல்ல மூன்றாவது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் போட்டி ஜனவரி 28ஆம் தேதி இரவு 7 மணிக்கு ராஜ்கோட் நகரில் உள்ள நிரஞ்சன் சா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
ராஜ்கோட் மைதானம்:
2009இல் தோற்றுவிக்கப்பட்டு 28000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த மைதானம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தை போன்ற ஸ்பெஷல் பால்கனியை கொண்டுள்ளது. இம்மைதானத்தில் 2013 முதல் சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் இதுவரை நடைபெற்ற 5 போட்டிகளிலும் விளையாடியுள்ள இந்தியா 4 வெற்றிகளையும் ஒரு தோல்வியையும் சந்தித்துள்ளது. அந்த வகையில் ராசியாக பார்க்கப்படும் இந்த மைதானத்தில் இந்தியா முதல் முறையாக இங்கிலாந்தை இம்முறை சந்திக்கிறது.
வெதர் ரிப்போர்ட்:
ராஜ்கோட் நகரை சுற்றிய பகுதிகளில் ஜனவரி 28ஆம் தேதி மழை பெய்வதற்கு வாய்ப்பு இல்லை என்று இந்திய வானிலை மையம் தெரிவிக்கின்றது. எனவே இந்த போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.
வெதர் ரிப்போர்ட்:
ராஜ்கோட் மைதானம் இந்தியாவில் இருப்பதிலேயே பேட்டிங் செய்வதற்கு மிகவும் சாதகமான ஒரு மைதானமாக வரலாற்றில் அறியப்படுகிறது. ஏனெனில் இங்கே நல்ல வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவை இருக்கும். அதைப் பயன்படுத்தி பேட்ஸ்மேன்கள் எளிதாக அதிரடியாக ரன்கள் குவிக்க முடியும். அதே சமயம் நேரம் செல்ல செல்ல பிட்ச் கொஞ்சம் பவுலிங் செய்வதற்கு சாதகமாக மாறலாம்.
இதையும் படிங்க: அந்த அணிக்காக விளையாடியதுதான் ஏ.பி.டி செய்த மிகப்பெரிய தவறு – சஞ்சய் மஞ்சரேக்கர்
எப்படி இருந்தாலும் இந்த மைதானத்தில் இம்முறையும் அதிக ரன்கள் எதிர்பார்க்கலாம். ஏனெனில் வரலாற்றில் இங்கு நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 189 ஆகும். இது போக இங்கு முதலில் பேட்டிங் செய்த அணிகள் 3 முறையும் சேசிங் செய்த அணிகள் இரண்டு முறையும் வென்றுள்ளன. எனவே இது இரவு நேர போட்டி என்பதால் பனியின் தாக்கத்தை கருத்தில் கொண்டு டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பவுலிங் செய்து சிறப்பாக விளையாடுவது வெற்றியை கொடுக்கலாம்.



