- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியா – இங்கிலாந்து முதல் டி20 நடைபெறும் கொல்கத்தா மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

இந்திய அணி தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீபத்தில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவிடம் தோற்றாலும் இலங்கை, வங்கதேசம், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்களில் இந்தியா வென்றது. எனவே சூரியகுமார் தலைமையில் இத்தொடரில் ஜோஸ் பட்லர் தலைமையிலான வலுவான இங்கிலாந்து அணியை சொந்த மண்ணில் தோற்கடிக்க இந்திய அணி போராட உள்ளது.

அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடரின் முதல் போட்டி ஜனவரி 22ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்ட்ஸ் கிரிக்கெட் enமைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் 24 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்தியா 13, இங்கிலாந்து 11 வெற்றிகளை பெற்றுள்ளன.

- Advertisement -

ஈடன் கார்ட்ஸ் மைதானம்:

1864ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த பழமையான மைதானம் 66,000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளை கொண்டுள்ளது. இங்கு 2011 முதல் சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 5 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் சந்தித்துள்ளது. 2011இல் இங்கே இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய போட்டியில் இந்தியா தோல்வியுற்றது.

வெதர் ரிப்போர்ட்:

கொல்கத்தாவில் இந்தப் போட்டி நடைபெறும் நாளில் 10% மட்டுமே மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவிக்கிறது. எனவே இந்த போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:

ஈடன் கார்ட்ஸ் மைதானத்தின் பிட்ச் வரலாற்றில் டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருந்து வருகிறது. இங்கே நல்ல வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவை இருக்கும் என்பதால் அதைப் பயன்படுத்தி பேட்ஸ்மேன்கள் எளிதாக பெரிய ரன்கள் குவிக்க முடியும். இப்போட்டி இரவு நேரத்தில் நடைபெற உள்ளதால் குளிர்ச்சியான சூழ்நிலையில் வேகப்பந்து வீச்சாளர்களும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

இதையும் படிங்க: 31க்கு ஆல் அவுட்.. 4 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. ஹாட்ரிக்கால் மலேசியாயை தூளாக்கிய வைஷ்ணவி.. 2 வரலாற்று சாதனை

மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் சில விக்கெட்டுகளை எடுத்து சவாலை கொடுப்பார்கள். இந்த மைதானத்தில் வரலாற்றில் நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 155 ஆகும். இங்கே வரலாற்றில் 5 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும் 7 முறை சேசிங் செய்த அணிகளும் வென்றுள்ளன. எனவே இம்முறையும் பனியின் தாக்கத்தையும் கருதி டாஸ் வெல்லும் கேப்டன் சேசிங் செய்யும் முடிவை எடுத்து சிறப்பாக விளையாடுவது வெற்றிக்கு வித்திடலாம்.

- Advertisement -