இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது ஏற்கனவே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியிருந்தது.
இரண்டாவது நாள் ஆட்டமும் பாதிக்கப்பட வாய்ப்பு :
இதன் காரணமாக தற்போது ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது. செப்டம்பர் 27ஆம் தேதியான இன்று கான்பூர் நகரில் துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய வங்கதேச அணி 35 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் பெய்த மழை கனமழையாக மாறியதால் முதல்நாள் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நாளை இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் இந்த இரண்டாம் நாள் ஆட்டமும் திட்டமிட்டபடி நடைபெறாது என்று தெரிகிறது. ஏனெனில் கான்பூர் நகரின் வானிலை அறிக்கை வெளியாகி அந்த விளக்கத்தை அளித்துள்ளது. அதன்படி நாளை செப்டம்பர் 28-ஆம் தேதி அங்கு மழை பெய்ய 80 சதவீதம் வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் நிச்சயம் போட்டி நடைபெற வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.
மேலும் இன்று பெய்த கனத்த மழையே மைதானத்தை பெரும்பளவு பாதித்துள்ளதால் நாளை போட்டி ஒருவேளை துவங்கினாலும் சற்று கால தாமதமாக தான் துவங்கும் என்றும் அவ்வாறு போட்டி துவங்கினாலும் அவ்வப்போது மழை பெய்தால் நிச்சயம் அடிக்கடி போட்டி நிறுத்தப்படும் என்பதனால் நாளைய போட்டி ரத்தாக அதிக வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க : கொல்கத்தா அணியின் நிர்வாகம் வழங்கிய அந்த ஆஃபரால் தான் பிராவோ கொல்கத்தா அணிக்கு சென்றாராம் – விவரம் இதோ
மேலும் அடுத்த மூன்றாவது நாளும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி முழுவதுமாக நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி நெருங்கி வரும் வேளையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிவு இன்றி கைவிடப்பட்டால் அது இந்திய அணிக்கு பாதகமாகவே மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.



