ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட இந்தியா பங்களாதேஷ் ஒருநாள் தொடர்.. என்ன காரணம்? – விவரம் இதோ

IND vs BAN
- Advertisement -

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடருக்கு அடுத்து ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணியானது பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

ஒத்திவைக்கப்பட்ட இந்தியா பங்களாதேஷ் தொடர் :

அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த இந்திய அணியானது அங்கு நடைபெற இருந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க இருந்தது. ஆனால் இந்த தொடரானது தற்போது அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

அதுகுறித்து வெளியான அறிவிப்பின்படி : இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியமான பி.சி.பி ஆகிய இரண்டு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இணைந்து இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இந்த ஒருநாள் தொடரை 2026 செப்டம்பர் வரை ஒத்திவைக்க பரஸ்பர சம்மதம் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு காரணம் யாதெனில் : இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளுக்கு இடையேயான உறவின் விரிசல் மற்றும் இந்திய வீரர்களுக்கான பாதுகாப்பு ஆகிய சில காரணங்களால் இந்த சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டும் இன்றி இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் தொடர்பான பதற்றங்களையும் முன்வைத்து தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

கடைசியாக இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது மோதின. அந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தியிருந்தது. இவ்விரு அணிகளுக்கும் இடையே கடைசியாக நடைபெற்ற இருதரப்பு தொடரானது கடந்த 2024-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்றது.

இதையும் படிங்க : ஜஸ்ட் மிஸ்.. ரோஹித் சர்மாவின் உலக சாதனையை அருகில் சென்று தவறவிட்ட சுப்மன் கில் – விவரம் இதோ

அந்த தொடரில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை (2-0) இரண்டுக்கு பூஜ்யம் என்ற கணக்கிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை (3-0) மூன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கிலும் இந்திய அணி கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement