IND vs AUS : வரிசை கட்டி வீட்டுக்கு சென்ற இந்திய வீரர்கள். மூன்றாவது போட்டியில் – ஏற்படவுள்ள மாற்றங்கள்

IND-vs-AUS
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி துவங்கிய இந்த தொடரானது இன்று செப்டம்பர் 27-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணியானது இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இந்த தொடரை கைப்பற்றியுள்ளது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது இன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற உள்ளது. உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெறும் கடைசி சர்வதேச ஒருநாள் போட்டி என்பதனால் இந்த போட்டியின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

- Advertisement -

மேலும் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஓய்வில் இருந்த சீனியர் வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ளதால் இந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கப் போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த மூன்றாவது போட்டிக்கு முன்னதாக அடுத்தடுத்து வீரர்கள் இந்திய அணியில் இருந்து வெளியேறியுள்ளது தற்போது மூன்றாவது போட்டிக்கான அணியில் ஏகப்பட்ட மாற்றங்களை நிகழ்த்தும் வகையில் மாறியுள்ளது.

அந்த வகையில் ஏற்கனவே இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடியிருந்த சுப்மன் கில் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோருக்கு மூன்றாவது போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து முகமது ஷமி மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோரும் வீடு திரும்பியுள்ளதாக ரோகித் சர்மா அறிவித்தார். இதன் காரணமாக முகேஷ் குமார் மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் இணைந்துள்ளார் என்று அறிவித்திருந்தார்.

- Advertisement -

அதுமட்டும் இன்றி இந்த மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் 13 வீரர்கள் மட்டுமே அணியில் இருப்பதாகவும் ரோகித் சர்மா தெரிவித்திருந்தார். இதன் காரணமாக இன்றைய மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த மூன்றாவது போட்டியில் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோரே துவக்க வீரர்களாக விளையாட வாய்ப்புள்ளது. அதேபோன்று ஆறாவது இடத்தில் ஹார்டிக் பாண்டியா இல்லாததால் சூரியகுமார் யாதவ் விளையாடுவார்.

இதையும் படிங்க : IND vs AUS : சுப்மன் கில், ஷர்துல் தாகூர் ஆகியோரை தொடர்ந்து மேலும் 2 வீரர்கள் வெளியேற்றம் – உறுதிசெய்த ரோஹித்

மேலும் முதல் இரண்டு போட்டிகளிலும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடிய இந்திய அணியானது இன்று அஸ்வின், ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் என மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடனும், சிராஜ் மற்றும் பும்ரா என இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் மட்டுமே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement