IND vs AUS : சுப்மன் கில், ஷர்துல் தாகூர் ஆகியோரை தொடர்ந்து மேலும் 2 வீரர்கள் வெளியேற்றம் – உறுதிசெய்த ரோஹித்

Rohit-Sharma
- Advertisement -

இந்தியாவில் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியானது இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ஹார்டிக் பாண்டியா, சிராஜ் போன்ற வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.

இவ்வேளையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் விளையாடியது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணி மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியது.

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது இன்று செப்டம்பர் 27-ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் அனைவரும் அணிக்கு திரும்புவார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வேளையில் முதல் இரண்டு போட்டியிலும் விளையாடிய சுப்மன் கில் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் ஓய்வெடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மூன்றாவது போட்டிக்கான இந்திய அணி தற்போது தயாராக இருக்கும் வேளையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டி ஒன்றில் மேலும் இரண்டு வீரர்கள் இந்திய அணியில் இருந்து விலகி உள்ளதாக அறிவித்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் வேகப்பந்து பேச்சாளர் முகமது ஷமி மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் இந்த மூன்றாவது போட்டியில் இருந்து விலகி வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். அதேபோன்று இந்த மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் மொத்தம் 13 வீரர்கள் மட்டுமே தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : 9 பந்தில் 50 ரன்கள்..யுவி, ரோஹித் சாதனை உடைந்ததா.. 20 ஓவரில் 314 ரன்கள்.. மங்கோலியாவை சிதைத்த நேபாள் – 5 உலக சாதனை

இருப்பினும் உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற இருக்கும் பயிற்சி ஆட்டத்தில் அறிவிக்கப்பட்ட அனைத்து வீரர்களும் அணியில் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement