IND vs AUS : நாளைய 3 ஆவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

IND-vs-AUS
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 22-ஆம் தேதி துவங்கி நாளை செப்டம்பர் 27-ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணியானது இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இந்த தொடரை கைப்பற்றி விட்டது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வழிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை செப்டம்பர் 27-ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற இருக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் மீண்டும் அவர்கள் அணியில் இணைய காத்திருக்கின்றனர்.

- Advertisement -

இதன் காரணமாக இந்த மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு முதல் இரண்டு போட்டிகளிலும் விளையாடிய துவக்க வீரர் சுப்மன் கில் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோருக்கு மூன்றாவது போட்டியில் ஓய்வளிப்பட்டுள்ளது.

அதன் காரணமாகவும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நாளைய மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பது குறித்த உத்தேச பட்டியலை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அந்த வகையில் நாளைய போட்டியில் துவக்க வீரர்களா ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் விளையாட வாய்ப்புள்ளது.

- Advertisement -

அதேபோன்று 3-ஆவது விராட் கோலியும், 4-ஆவது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயரும், 5-ஆவது இடத்தில் கே.எல் ராகுலும் விளையாட வாய்ப்புள்ளது. ஆறாவது இடத்தில் ஹார்திக் பாண்டியாவும், ஏழாவது இடத்தில் ரவீந்திர ஜடேஜா அல்லது குல்தீப் யாதவ் ஆகிய இருவரில் ஒருவரும் இடம்பெற வாய்ப்புள்ளது. மேலும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா, ஷமி, சிராஜ் ஆகியோர் விளையாட வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் நாளைய மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : IND vs AUS : ராஜ்கோட்டில் நடைபெற இருக்கும் 3 ஆவது போட்டியில் இருந்து முக்கிய வீரர் விலகல் – வெளியான அறிவிப்பு

1) ரோஹித் சர்மா, 2) இஷான் கிஷன், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) கே.எல் ராகுல், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) அஷ்வின், 9) பும்ரா, 10) முகமது ஷமி, 11) முகமது சிராஜ்.

Advertisement