இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரேயானா டெஸ்ட் தொடரின் அட்டவணை அறிவிப்பு – அதிகாரபூர்வ அறிவிப்பு

IndvsAus-1
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கிரிக்கெட் போட்டிகள் உலகம் முழுவதும் தடைசெய்யப்பட்டுள்ளன. மேலும் அடுத்து கிரிக்கெட் போட்டிகள் எப்போது துவங்கும் என்ற கேள்வியுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெறப்போகும் டெஸ்ட் தொடர் கேள்விக்குறியாக இருந்தது. ஏற்கனவே ஐபிஎல் தொடர் தள்ளிவைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி உலகம் முழுவதும் பல தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Ind

- Advertisement -

இதன்காரணமாக இந்த தொடரும் திட்டமிட்டபடி நடைபெறுமா ? என்ற சந்தேகம் இருந்துக்கொண்டே வந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்தத்தொடர் நடைபெறும் என்றும், இந்த தொடரானது டிசம்பர் 3-ஆம் தேதியிலிருந்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராக நடைபெறும் என்று தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடரில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி டிசம்பர் மூன்றாம் தேதி முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்திலும், டிசம்பர் 11ஆம் தேதி அடிலைட், 26 ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் 3 ஆவது போட்டியும், அதன் பின்னர் சிட்னி ஆகிய மைதானங்களில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ind

மேலும் இதில் ஒரு போட்டி கண்டிப்பாக பகலிரவு ஆட்டமாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த திட்டங்களுக்கு ஏற்கனவே இரண்டு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதனை தாண்டி இந்த அனைத்து டெஸ்ட் போட்டிகளும் ரசிகர்களுடன் கூடிய மைதானத்தில்தான் நடைபெறும் எனவும் திட்டவட்டமாக செய்திகள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இதற்காக ஆஸ்திரேலியா வரும் இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் டெஸ்ட் தொடர் எவ்வாறு நடைபெறுகிறது என்று மேலும் இந்தத்தொடர் நடைபெற அடுத்த ஆறு மாதம் காலஅவகாசம் இருப்பதால் கண்டிப்பாக இத்தொடர் நடைபெறும் என்பதனால் ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

indvsaus

கடந்தமுறை இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. ஆனால் அப்போது ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் இல்லாததால் பெரிய போட்டி இல்லை. ஆனால் இம்முறை அவர்கள் இருவரும் இருப்பதால் இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement