IND vs AUS : இந்தியா ஆஸ்திரேலியா டி20 தொடரை எந்த சேனலில் பார்க்கலாம் – போட்டிகள் எத்தனை மணிக்கு துவங்கும்?

INDvsAUS
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஆசியக் கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியானது பரிதாபமாக அந்த தொடரில் இருந்து வெளியேறிய வேளையில் அடுத்ததாக டி20 உலகக்கோப்பைக்காக தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரேயான டி20 தொடரில் கலந்து கொண்டு விளையாட இருக்கிறது.

indvsaus

- Advertisement -

இந்த போட்டிகளில் அட்டவணைப்படி முதலாவதாக இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா அணியானது வரும் செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியை எதிர்த்து விளையாடி இருக்கிறது. இந்த தொடரானது இன்னும் 10 தினங்களில் துவங்கவுள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி செப்டம்பர் 20-ஆம் தேதி மொஹாலி மைதானத்திலும், இரண்டாவது டி20 போட்டி செப்டம்பர் 23-ஆம் தேதி நாக்பூர் மைதானத்திலும், மூன்றாவது டி20 போட்டி செப்டம்பர் 25-ஆம் தேதி ஹைதராபாத் மைதானத்திலும் நடைபெற உள்ளது.

starsport

இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான போட்டிகள் அனைத்தும் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்? இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு துவங்கும்? என்பது குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம். அதன்படி இந்த இந்தியா ஆஸ்திரேலியா டி20 போட்டிகள் அனைத்தையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும தொலைக்காட்சிகளில் கண்டு களிக்கலாம். மேலும் பல்வேறு மொழிகளில் இந்த தொடரானது வர்ணனை செய்யப்பட உள்ளதால் ரசிகர்கள் விருப்பப்பட்ட மொழிகளில் போட்டிகளைக் கண்டு ரசிக்கலாம்.

- Advertisement -

அதே போன்று ஆன்லைன் மூலம் போட்டியை காண விரும்புவோர் ஹாட் ஸ்டார் ஆப்பின் மூலம் இந்த டி20 தொடரை கண்டு களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரானது இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : படங்கள் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்த 7 கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் – லிஸ்ட் இதோ

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் இதோ : 1) ரோஹித் ஷர்மா (கேப்டன்), 2) கே.எல்.ராகுல் (துணைக் கேப்டன்), 3) விராட் கோலி, 4) சூர்யகுமார் யாதவ், 5) தீபக் ஹூடா, 6) ஹார்திக் பாண்டியா, 7) தினேஷ் கார்த்திக், 8) ரிஷப் பண்ட், 9) அக்சர் படேல், 10) அஸ்வின், 11) யுஸ்வேந்திர சாஹல், 12) ஹர்ஷல் படேல், 13) புவனேஷ்வர் குமார், 14) ஜஸ்பரீத் பும்ரா, 15) அர்ஷ்தீப் சிங், 16) தீபக் சஹார், 17) முகமது ஷமி.

Advertisement