ஐசிசி-யின் 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் கடந்த ஒன்றரை மாதங்களாக கோலாலமாக நடைபெற்று நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. இந்த தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்திய வேளையில் இந்திய அணியை சொந்த மண்ணில் வைத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியானது ஆறாவது முறையாக ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
அதனை தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலிய அணி இந்தியாவிலேயே தங்கி இருந்து அடுத்ததாக இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் பல முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்ட வேளையில் உலக கோப்பையில் இடம் பெற்றிருந்த ஏழு வீரர்கள் இந்த டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இணைந்து விளையாடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே வெளியான அட்டவணையின் படி நவம்பர் 23-ஆம் தேதி நாளை மறுதினம் துவங்கும் இந்த தொடரானது டிசம்பர் 3-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் அறிவிக்கப்பட்ட வேளையில் தற்போது இந்த டி20 தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் முன்னணி நட்சத்திர துவக்க வீரரான டேவிட் வார்னர் விலகியுள்ளார் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் துவக்க வீரராக விளையாடியிருந்த டேவிட் வார்னர் கோப்பையை வென்ற பின்னர் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும் என்று கூறி தாயகம் திரும்ப முடிவு செய்துள்ளதால் இந்த டி20 தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.
இதையும் படிங்க : சஞ்சு சாம்சனை செலக்ட் பண்ணல ஓகே.. ஆனா இவரையும் சேக்காதது ரொம்ப பெரிய தப்பு – ரசிகர்கள் கோபம்
அவரது இந்த விலகலால் அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் ஆரோன் ஹார்டி தற்போது ஆஸ்திரேலிய சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் இந்த தொடருக்கான ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக அனுபவ விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான மேத்யூ வேட் செயல்படுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.