IND vs AUS : அவரோட பவுலிங்க்கு எதிரா சிக்ஸ் அடிச்சது ரொம்ப ஸ்பெஷல் – சுப்மன் கில் மகிழ்ச்சி

Shubman-Gill
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 99 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த வேளையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் 99 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அசத்தியது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்களை குவித்தது. அதிலும் குறிப்பாக இந்த போட்டியில் இந்திய அணியின் சார்பாக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய துவக்க வீரர் சுப்மன் கில் 97 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 104 ரன்கள் குவித்து அசத்தினார்.

அவரது இந்த சிறப்பான ஆட்டம் அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய சுப்மன் கில் கூறுகையில் :

- Advertisement -

நான் இன்று விளையாடிய விதம் உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டியில் நான் நினைத்த அனைத்தும் இருந்த திருப்தி இருப்பதால் இந்த எனக்கு நிறையவே நம்பிக்கையும் அளித்துள்ளது. சரியான நேரத்தில் நாங்கள் அனைவரும் பார்முக்கு வந்துள்ளோம். சூழ்நிலைக்கு ஏற்றவாறு எவ்வாறு விளையாட வேண்டும் என்பது தற்போது எனக்கு தெரிந்துள்ளதால் மேலும் இந்த விடயம் அணிக்கு நம்பிக்கையை தரும் விதமாக உள்ளது.

இதையும் படிங்க : நீயெல்லாம் கேப்டனான்னு கிண்டல் பண்ணாங்க.. 2023 சிபிஎல் கோப்பை கேப்டனா வெல்ல அஸ்வின் தான் காரணம் – இம்ரான் தாஹிர் நெகிழ்ச்சி

400 ரன்கள் இலக்கு என்பது எந்த ஒரு மைதானத்திலுமே எதிரணிக்கு கடினமான இலக்கு தான். பந்து வீச்சாளர்களும் மிகச் சிறப்பாக செயல்பட்டு எங்களை வெற்றி பெற வைத்தனர். அதிலும் குறிப்பாக நான் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனுக்கு எதிராக அடித்த சிக்சர் மிகவும் ஸ்பெஷலான ஒன்று அதை நான் மறக்க மாட்டேன் என சுப்மன் கில் பேசியது குறிப்பிடத்தக்கது

Advertisement