ஐ.பி.எல் முடிந்த கையோடு வெளிநாட்டிற்கு பறக்கும் இந்திய அணி – பி.சி.சி.ஐ வெளியிட்ட போட்டி அட்டவணை

INDvsAUS

ஐபிஎல் தொடர் நவம்பர் 10ஆம் தேதி முடிவடைந்துவிடும் இந்த தொடர் முடிந்தவுடன் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று விதமான போட்டிகளிலும் விளையாட இருக்கிறது. கொரோனா வைரஸ் காரணமாக இந்த தொடர் நடக்குமா ? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்தது. தற்போது உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருவதால் இந்த தொடர் கண்டிப்பாக நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை.

Ind vs Aus

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதன் காரணமாக வீரர்களை தனிமைப்படுத்தல் மற்றும் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தல் ஆகிய வேலைகளில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஐபிஎல் முடிந்ததும் ஆஸ்திரேலியாவிற்கு புறப்படும் இந்திய வீரர்களின் பட்டியலை இன்னும் சில தினங்களில் வெளியிடப்போவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் கங்குலி அறிவித்திருந்தார். தற்போது இந்த தொடருக்கான உத்தேச அட்டவணையும் வெளியாகியுள்ளது .

இந்திய அணி 27 மற்றும் 29ம் தேதிகளில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளை சிட்னி மைதானத்தில் டிசம்பர் ஒன்றாம் தேதி மூன்றாவது ஒருநாள் போட்டியை கான்பரா மைதானத்திலும் விளையாடப் போகிறது. இந்த இரண்டு நகரங்களிலும் டிசம்பர் 4, 6, 8 ஆகிய தேதிகளில் 20 போட்டிகளும் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

- Advertisement -

Ind-1

அதனைத் தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 17 முதல் 21 ஆம் தேதி வரை அடிலெய்ட் மைதானத்தில், இரண்டாவது டெஸ்ட் போட்டி 26 ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை மெல்போர்ன் மைதானத்தில், மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜனவரி ஏழாம் தேதி முதல் 16ம் தேதி வரை சிட்னி மைதானத்தில், நான்காவது டெஸ்ட் போட்டி ஜனவரி 15ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை பிரிஸ்பேன் மைதானத்திலும் நடக்க இருப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது.