இறுதி போட்டியை நேரில் பார்த்தவருக்கு கொரோனா. இன்னும் எத்தனை பேருக்கு வரப்போகுதோ ? – அதிர்ச்சி தகவல் இதோ

Ind
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் மோதின. இறுதியாக ஆஸ்திரேலிய பெண்கள் அணி இந்திய அணியை 86 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது .

aus w

- Advertisement -

முதன்முறையாக ஐ.சி.சி உலககோப்பைக்கு பைனலுக்கு முன்னேறிய இந்திய அணி வெற்றிபெறும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த தோல்வி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. இந்த தோல்விக்கு பின்னரும் இந்திய அணிக்கு பலரும் ஆறுதல் கூறிவந்தனர்.

இந்நிலையில் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியை காண இந்த மைதானத்தில் 86000 ரசிகர்கள் அமர்ந்து கண்டுகளித்தனர். இதில் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது . இந்த செய்தியை ஆஸ்திரேலிய சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மேலும் அந்த ரசிகர் அமர்ந்து பார்த்த இருக்கை எண்னையும் வெளியிட்டுள்ளது.
இவருக்கு அருகில் அமர்ந்து பார்த்த ரசிகர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறும் ஆஸ்திரேலிய சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

- Advertisement -

உலக அளவில் பரவிவரும் இந்த கொரோனா வைரஸ் காரணமாக பலரும் உயிரிழந்த நிலையில் தற்போது கிரிக்கெட் போட்டியை காண சென்ற ரசிகர் ஒருவர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டதை தொடர்ந்து ரசிகர்கள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது இந்தியாவில் நடைபெற இருந்த ஐ.பி.எல் தொடரும் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement