பெர்த்தில் 31%.. 2வது டெஸ்டில் வெறும் 20.3%.. முக்கிய யுக்தியை கோட்டை விட்ட இந்தியா.. அடிக்கும் ஆஸி

IND vs AUS
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் வென்ற இந்தியா இரண்டாவது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கியுள்ளது. நவம்பர் 6ஆம் தேதி அடிலெய்ட் நகரில் பகலிரவாக துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதை அடுத்து களமிறங்கிய இந்தியா கொஞ்சம் தடுமாற்றமாக விளையாடி முதல் இன்னிங்ஸில் 180 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. ஜெய்ஸ்வால், விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்தனர். அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 42, கேஎல் ராகுல் 37, கில் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

- Advertisement -

இந்தியா போராட்டம்:

அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா 13 ரன்கள் எடுத்திருந்த போது பும்ரா வேகத்தில் அவுட்டானார். ஆனால் மற்றொரு துவக்க வீரர் நாதன் மெக்ஸ்வீனி நிதானமாக விளையாடினார். அவருடன் சேர்ந்து லபுஸ்ஷேன் நங்கூரமாக விளையாடி முதல் நாள் ஆட்டத்தை மேற்கொண்டு விக்கெட் விடாமல் முடித்தார்கள்.

அதனால் முதல் நாளில் 86-1 ரன்கள் எடுத்துள்ள ஆஸ்திரேலியா அணிக்கு களத்தில் லபுஸ்ஷேன் 20*, மெக்ஸ்வீனி 38* ரன்களுடன் உள்ளார்கள். அந்த வகையில் இப்போட்டியில் முதல் நாளில் இந்திய அணி தடுமாற்றமான செயல்பாடுகளையே வெளிப்படுத்தியது. அதனால் இரண்டாவது போட்டியில் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப இந்திய அணி போராட வேண்டியுள்ளது.

- Advertisement -

தடுமாற்ற பவுலிங்:

முன்னதாக பகல் இரவு டெஸ்ட் போட்டிகளில் பெரும்பாலும் இரவு நேரத்தில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாகும். அந்த வகையில் இப்போட்டியிலும் முதல் 10 ஓவர்களில் இந்திய பவுலர்களுக்கு எதிர்பார்த்த அளவு நல்ல வேகம் மற்றும் ஸ்விங் ஆகியவை கிடைத்தது. அதை பயன்படுத்தி இந்திய பவுலர்கள் ஸ்டம்பை அட்டாக் செய்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை திணறடிக்காதது வர்ணனையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இதையும் படிங்க: ஆஸ்திரேலிய மண்ணில் 147 ஆண்டுகால மோசமான சாதனையக்கு ஆளாகிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – விவரம் இதோ

மாறாக அவர்கள் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் அதிகமாக வீச அதை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் எளிதாக அடிக்காமல் விட்டு விக்கெட்டை காப்பாற்றிக் கொண்டனர். சொல்லப்போனால் பெர்த் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் 31% பந்துகளை ஸ்டம்ப் லைனில் வீசிய இந்திய பவுலர்கள் வெறும் 10.9% மட்டுமே அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசினார். அதனால் 65 ரன்கள் மட்டும் கொடுத்த அவர்களுக்கு 7 விக்கெட்டுகளை எடுத்தார்கள். ஆனால் இந்த போட்டியின் முதல் நாளில் வெறும் 20.3% மட்டுமே ஸ்டம்ப் லைனில் வீசிய இந்திய பவுலர்கள் 21.3% அவுட் சைட் ஆஃப் லைனில் வீசியது ஒரு விக்கெட்டை மட்டுமே கொடுத்தது.

Advertisement