இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது இன்று டிசம்பர் 6-ஆம் தேதி அடிலெய்டு மைதானத்தில் பகலிரவு போட்டியாக துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, சுப்மன் கில் மற்றும் அஸ்வின் ஆகிய மூவரும் இடம் பிடித்துள்ளதனர்.
யாஷஸ்வி ஜெய்ஸ்வால் நிகழ்த்திய மோசமான சாதனை :
இதன் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மூன்று மாற்றங்களுடன் இந்திய அணி விளையாடி வருகிறது. அந்த வகையில் இன்றைய போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 180 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக நிதீஷ் குமார் ரெட்டி 42 ரன்களையும், கேஎல் ராகுல் 37 ரன்களையும், சுப்மன் கில் 31 ரன்களையும் குவித்து அசத்தினர்.
அதனை தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலியா அணியானது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 147 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் மோசமான சாதனையை ஆஸ்திரேலிய மண்ணில் நிகழ்த்தியுள்ளார்.
அதாவது இந்த போட்டியில் முதல் பந்தை சந்தித்த அவர் மிட்சல் ஸ்டார்க் பந்துவீச்சில் lbw முறையில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் பந்தில் வீழ்ந்த முதல் இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.
இதையும் படிங்க : இந்தியா 87/5 டூ 180.. 6 சிக்ஸ்.. கை கொடுத்த நிதிஷ் ரெட்டி.. அதற்குள் தோனி, கோலி, கங்குலியை முந்தி அபாரம்
கடந்த போட்டியின் போதும் முதல் இன்னிங்சில் டக் அவுட்டாகி இருந்தாலும் ஒரு சில பந்துகளை எதிர் கொண்டிருந்தார். அதனை தொடர்ந்து அசத்திய அவர் இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்து அசத்தினார். அதனைத்தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த போட்டியின் முதல் பந்தியிலேயே அவர் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.