இந்தியா – ஆஸி மோதும் கடைசி டி20 நடைபெறும் பெங்களூரு மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடருக்கு பின் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர்கள் ஓய்வெடுத்த நிலையில் சூரியகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கிய இளம் இந்திய அணி 4 போட்டிகளின் முடிவில் 3 – 1* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது.

அந்த வகையில் 2023 உலகக் கோப்பை தோல்விக்கு ஆறுதல் வெற்றி பெற்ற இந்தியா கடைசி போட்டியிலும் வென்று இத்தொடரை வெற்றியுடன் நிறைவு செய்ய முயற்சிக்க உள்ளது. மறுபுறம் முக்கிய வீரர்கள் இல்லாமல் சுமாராக விளையாடி இத்தொடரை இழந்த ஆஸ்திரேலியா உலகக் கோப்பையில் இந்தியாவை தோற்கடித்த நிம்மதியுடன் கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்து நாடு திரும்ப தயாராகியுள்ளது.

- Advertisement -

பெங்களூரு மைதானம்:
அந்த வகையில் சம்பிரதாயத்திற்காக நடைபெற உள்ள இப்போட்டி டிசம்பர் 3ஆம் தேதி இரவு 7 மணிக்கு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் இருக்கும் எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த 1969இல் தோற்றுவிக்கப்பட்டு 40,000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளை கொண்ட இம்மைதானத்தில் 2012 முதல் சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அதில் இதுவரை நடைபெற்ற 8 போட்டிகளில் 6 போட்டியில் விளையாடியுள்ள இந்தியா 2 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. ஆனால் இங்கு ஆஸ்திரேலியா விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக இங்கு விளையாடிய 1 போட்டியிலும் ஆஸ்திரேலியா வென்றுள்ளது. இந்த மைதானத்தில் அதிக ரன்கள் அடித்த வீரராக கிளன் மேக்ஸ்வெல் (136) அதிக விக்கெட்களை எடுத்த பவுலராக யுஸ்வேந்திர சஹால் (6) முதலிடத்தில் உள்ளனர். இங்கு அதிகபட்ச டி20 ஸ்கோர் பதிவு செய்துள்ள அணி இந்தியா : 202/6, இங்கிலாந்துக்கு எதிராக, 2017

- Advertisement -

வெதர் ரிப்போர்ட்:
டிசம்பர் 1ஆம் தேதி பெங்களூரு நகரில் சராசரியாக 20% மட்டுமே மழை பெய்யும் என்றும் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இந்திய மாநில மையம் தெரிவிப்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

பிட்ச் ரிப்போர்ட்:
பெங்களூரு பிட்ச் பேட்டிங்க்கு சாதகமாக இருந்து வருவதை அனைவரும் அறிவோம். போதாகுறைக்கு இங்குள்ள பவுண்டரிகளின் அளவு சிறிதாக இருக்கும் என்பதால் பேட்ஸ்மேன்கள் தொட்டாலே சிக்ஸர் பறக்கும். மேலும் நடைபெற்று முடிந்த 2023 உலகக் கோப்பையில் இங்கு நடைபெற்ற பெரும்பாலான போட்டிகளில் அனைத்து அணிகளும் 300க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்தன.

இதையும் படிங்க: இந்தியா – ஆஸி மோதும் கடைசி டி20 நடைபெறும் பெங்களூரு மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

எனவே இப்போட்டியிலும் பேட்ஸ்மேன்கள் நிலைத்து விளையாடினால் எளிதாக பெரிய ரன்கள் குவிக்க முடியும். அதனால் பவுலர்கள் நல்ல லைன், லென்த் ஆகியவற்றை பின்பற்றினால் மட்டுமே ஓரளவு தாக்கு பிடித்து விக்கெட்களை எடுக்க முடியும். வரலாற்றில் இங்கு நடைபெற்ற போட்டிகளில் 5 முறை சேசிங் செய்த அணியும் 2 முறை முதலில் செய்த அணியும் வென்றுள்ளது. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் பனியின் தாக்கத்தையும் கருத்தில் கொண்டு முதலில் பந்து வீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement