இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா மண்ணில் 5 டி20 போட்டிகள் கொண்டத் தொடரில் விளையாடி வருகின்றது. 3 போட்டிகளின் முடிவில் 1 – 1* என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் அத்தொடரில் நான்காவது போட்டி நவம்பர் 6ஆம் தேதி நடைபெறுகிறது. அப்போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெறுவதற்கு இந்திய அணி தயாராக இருக்கிறது.
அதற்கு பதிலடி கொடுத்து வெற்றி பெற ஆஸ்திரேலியா அணியும் தயாராக இருக்கிறது. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 4வது போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1:45 மணிக்கு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து நகரில் இருக்கும் கோல்ட்கோஸ்ட் பகுதியில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் துவங்க உள்ளது. 90களில் தோற்றுவிக்கப்பட்ட இம்மாதனம் தற்போது 15000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.
கோல்ட் கோஸ்ட் மைதானம்:
வரலாற்றில் இங்கு 2 சர்வதேச டி20 போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. அதில் ஆஸ்திரேலியா 1 வெற்றி 1 தோல்வியை சந்தித்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இம்முறை தான் முதல் முறையாக இம்மைதானத்தில் மோத உள்ளது.
வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் கோல்ட் கோஸ்ட் பகுதிகளில் நவம்பர் ஆறாம் தேதி மழை பெய்வதற்கு வாய்ப்பில்லை என்று அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. அதே சமயம் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இப்போட்டியில் மழை பெய்வதற்கு வாய்ப்பில்லாமல் முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.
பிட்ச் ரிப்போர்ட்:
இம்மைதானத்தில் இருக்கும் பிட்ச் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சமமாக இருந்து வருகிறது. இங்கே வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய பந்தில் அதிக சவாலைக் கொடுக்கக்கூடும். நேரம் செல்ல செல்ல பிட்ச் ஸ்லோவாக மாறும் என்று எதிர்பார்க்கலாம். அதனால் முதல் ஒரு மணி நேரத்திற்கு பின் ஸ்பின்னர்கள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றியில் வித்தியாசத்தை ஏற்படுத்துவார்கள்.
இதையும் படிங்க: பிரசித் கிருஷ்ணாவுக்கு கிடைத்த ஏமாற்றம்.. அவருக்கு பதிலாக இடம்பிடித்த ஆகாஷ் தீப் – விவரம் இதோ
எனவே பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிப்பதற்கு சூழ்நிலைகளை உணர்ந்து நங்கூரம் கலந்த அதிரடியை வெளிப்படுத்துவது அவசியம். வரலாற்றில் இங்கு நடைபெற்ற 18 அனைத்து விதமான டி20 போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 159. இங்கு முதலில் பேட்டிங் செய்த அணிகளும் சேசிங் செய்த அணிகளும் சரி சமமாக தலா 9 முறை வென்றுள்ளன. எனவே இம்முறை டாஸ் வெல்லும் கேப்டன் எந்த முடிவை எடுத்தாலும் வெற்றிக்கு சிறப்பாக விளையாடுவது அவசியமாகிறது.



