இந்தியா – ஆஸி 3வது டெஸ்ட்.. காபா மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரங்கள் பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

Gabba Pitch
- Advertisement -

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2024 – 25 பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக துவங்கியுள்ளது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியாவை இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. அதனால் 1 – 1* (5) சமனில் இருக்கும் அந்தத் தொடரை வென்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற 3வது போட்டியில் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது.

மறுபுறம் இந்தியாவை மூன்றாவது போட்டியிலும் தோற்கடித்து முன்னிலை பெற ஆஸ்திரேலியா தயாராக உள்ளது. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடரின் மூன்றாவது போட்டி டிசம்பர் 14ஆம் தேதி பிரிஸ்பேன் நகரில் இருக்கும் புகழ்பெற்ற காபா கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி அதிகாலை 5.50 மணிக்கு துவங்குகிறது.

- Advertisement -

காபா மைதானம்:

1895இல் தோற்றுவிக்கப்பட்டு 37000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளை கொண்ட இந்த மைதானத்தில் 1931 முதல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மைதானத்தில் 66 போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலியா 42 வெற்றி 10 தோல்வி 1 டை பதிவு செய்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

மறுபுறம் இங்கே 7 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 1 வெற்றி 5 தோல்வி 1 ட்ராவை சந்தித்துள்ளது. 2021இல் கடைசியாக இங்கே விளையாடிய போட்டியில் 32 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலிய அணியை இந்தியா தோற்கடித்தது.

- Advertisement -

வெதர் ரிப்போர்ட்:

பிரிஸ்பேன் நகரில் டிசம்பர் 14ஆம் தேதி 80% மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. 2வது நாள் 20%, 3வது நாள் 40%, 4வது நாள் 50% 5வது நாள் 80% மழை பொழிவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிய வருகிறது. இருப்பினும் ஆஸ்திரேலியாவில் வானிலை அடிக்கடி மாறக்கூடியது என்பதால் இப்போட்டி முடிவு கிடைக்கும் அளவுக்கு நடைபெறும் என்று நம்பலாம்.

பிட்ச் ரிப்போர்ட்:

காபா பிட்ச் எக்ஸ்ட்ரா, பவுன்ஸ், வேகம், கேரி ஆகியவற்றை கொண்டதாக அறியப்படுகிறது. இம்முறை இயல்பு மாறாது என்றாலும் இந்த சமயத்திற்கு தகுந்தார் போல் பிட்ச் கொஞ்சம் பச்சை புற்களுடன் வித்தியாசமாக இருக்கும் என்று அதன் தயாரிப்பாளர் சண்டெர்ஸ்கி தெரிவித்துள்ளார். போதாகுறைக்கு மழை பெய்யும் சூழ்நிலை இருப்பதால் வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கே ஆரம்பம் முதலே ஆதிக்கத்தை செலுத்துவார்கள்.

இதையும் படிங்க: 2வது டெஸ்டில் தோற்க இதான் காரணம்.. அவங்கள பற்றி கவலைப்படாம காபாவில் ஜெயிப்போம்.. கில் உறுதி

எனவே பேட்ஸ்மேன்கள் இங்கே பெரிய ரன்கள் குவிப்பதற்கு நன்கு செட்டிலாகி சூழ்நிலைகளை உணர்ந்து விளையாடுவது மிகவும் அவசியம். 327, 317, 238, 161 என்பது இங்கே வரலாற்றில் நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் சராசரி 4 இன்னிங்ஸ்களின் ஸ்கோர். இங்கே வரலாற்றில் 26 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும் 27 முறை முதலில் பந்து வீசிய அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் எதை தீர்மானித்தாலும் வெற்றிக்கு சிறப்பாக விளையாடுவது அவசியம்.

Advertisement