2வது டெஸ்டில் தோற்க இதான் காரணம்.. அவங்கள பற்றி கவலைப்படாம காபாவில் ஜெயிப்போம்.. கில் உறுதி

Shubman Gill
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால் இளஞ்சிவப்பு நிற பந்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. இதை அடுத்து இத்தொடரின் மூன்றாவது போட்டி டிசம்பர் 14ஆம் தேதி பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற அந்த போட்டியில் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இந்தியா விளையாட உள்ளது. சொல்லப்போனால் 2021ஆம் ஆண்டு அந்த மைதானத்தில் ஆஸ்திரேலியாவை 32 வருடங்கள் கழித்து தோற்கடித்த இந்தியா வரலாற்று சாதனை வெற்றியை பெற்றது. அந்த உத்வேகத்துடன் இம்முறையும் விளையாடி வெற்றி காண இந்திய அணி தயாராகி உள்ளது.

- Advertisement -

சுப்மன் கில் நம்பிக்கை:

இந்நிலையில் இந்திய அணி இளஞ்சிவப்பு நிற பந்தில் அதிகமாக விளையாடுவதில்லை என்று சுப்மன் கில் தெரிவித்துள்ளார். அதனாலேயே இரண்டாவது போட்டியில் அனுபவமின்மையால் தோல்வியை சந்தித்ததாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் மூன்றாவது போட்டியில் மீண்டும் சிவப்பு நிற பந்தில் விளையாடுவதால் இந்தியா வெல்லும் என்று அவர் உறுதியான நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் இப்போதுள்ள இந்திய பேட்ஸ்மேன்கள் எதிரணி பவுலர்கள் யார் என்பதை பற்றி கவலைப்படாமல் விளையாடும் தன்னம்பிக்கை கொண்டுள்ளதாகவும் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இளஞ்சிவப்பு நிற பந்து வித்தியாசமானது. கொஞ்சம் கடினமானது. நாங்கள் சிவப்பு நிற பந்தில் அதிகமாக விளையாடுகிறோம். ஆனால் இளஞ்சிவப்பு நிற பந்தை இரவு நேரத்தில் கை நிலை காரணமாக எதிர்கொள்வது கடினமாக இருக்கிறது”

- Advertisement -

இந்தியா வெல்லும்:

“ஆஸ்திரேலியாவில் எப்போதும் விளையாடும் போட்டிகள் மிகவும் சவாலாக இருக்கும். எனவே இங்கே நீங்கள் அசத்துவதற்கு மனதளவில் திடமாக இருப்பது அவசியம். சூழ்நிலையில் சவாலாக இருக்கும். ஆனால் 35 ஓவர்கள் கடந்த பின் 2வது புதிய பந்தை எதிர்கொண்டு பேட்டிங் செய்வது எளிதாக இருக்கும். கடந்த போட்டியில் வென்று இருந்தால் நீங்கள் பயப்பட மாட்டீர்கள்”

இதையும் படிங்க: பிளான் ஏ, பி ரெடி.. காபாவில் இம்முறை இந்தியா தப்பிக்க முடியாது.. அதுக்கு ரெடியா இருங்க.. கமின்ஸ் எச்சரிக்கை

“ஆனால் நாங்கள் கடந்த முறை இந்த மைதானத்தில் வென்றுள்ளோம். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவிலும் நாங்கள் வென்றுள்ளோம். எனவே இந்த தலைமுறை யார் பந்து வீசுகிறார்கள் என்பதைப் பற்றி சிந்திக்காமல் பந்தைப் பார்த்து விளையாடும் தன்னம்பிக்கையைக் கொண்டது” என்று கூறினார்.

Advertisement