- Advertisement -
இந்திய கிரிக்கெட்

3வது டி20 நடைபெறும் ஆஸியின் கோட்டை ஹோபார்ட் மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியா தோற்றது. அடுத்ததாக நடைபெறும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில் 2வது போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இதைத் தொடர்ந்து நடைபெறும் 3வது போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து தொடரை சமன் செய்ய இந்திய அணி தயாராக உள்ளது.

மறுபுறம் 3வது போட்டியிலும் வென்று முன்னிலையை அதிகரிக்க ஆஸ்திரேலியா தயாராகியுள்ளது. அதனால் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 3வது போட்டி நவம்பர் 3ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்கு நடைபெற உள்ளது. அப்போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள ஹோபர்ட் நகரில் இருக்கும் பெல்லேரிவ் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

- Advertisement -

ஹோபார்ட் மைதானம்:

டாஸ்மானியாவில் உள்ள இம்மைதானம் 1914இல் தோற்றுவிக்கப்பட்டு 15,000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இங்கே 2010 நடைபெற்று வரும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 14 போட்டிகள் நடைபெற்றுள்ளது. அதில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலியா 5 வெற்றிகளைப் பெற்று ஹோபார்டை தங்களது கோட்டையாக வைத்துள்ளது. மறுபுறம் இந்தியா முதல் முறையாக இப்போது தான் இம்மைதானத்தில் டி20 போட்டியில் விளையாட உள்ளது.

வெதர் ரிப்போர்ட்:

நவம்பர் இரண்டாம் தேதி ஹோபார்ட் நகரில் சராசரியாக 10% மட்டுமே மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. பெரும்பாலான சமயங்களில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. எனவே இப்போட்டி மழையால் பாதிக்க பெருமளவு வாய்ப்பில்லை. அப்படியே இருந்தாலும் மழையின் தாக்கம் குறைவாக மட்டுமே இருக்கும் என்று நம்பலாம்.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:

இம்மைதானத்தின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் திறந்த வெளியாக இருக்கும். அதனால் நல்ல காற்றடிக்கும் என்பது புதிய பந்தை ஸ்விங் செய்யக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். அது மட்டுமின்றி இயற்கையாகவே அங்குள்ள வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றை பயன்படுத்தி நல்ல லைன், லென்த்தில் வீசும் பவுலர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் வழக்கமான தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

இதையும் படிங்க: ஹேசல்வுட் போறது ரொம்ப சந்தோசம்.. வெளுத்து வாங்க நினச்ச எனக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தாரு.. அபிஷேக் பாராட்டு

எனவே பேட்ஸ்மேன்கள் அவர்களை சமாளித்து சூழ்நிலையை உணர்ந்து நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினால் பெரிய ரன்கள் குவிக்க முடியும். வரலாற்றில் இங்கு நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 161. இங்கு வரலாற்றில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 7 முறையும் சேசிங் செய்த அணிகள் 6 முறையும் வென்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் எந்த முடிவை எடுத்தாலும் வெற்றிக்கு சிறப்பாக விளையாடுவது அவசியமாகிறது.

- Advertisement -