2வது டி20 போட்டி நடைபெறும் மெல்போர்ன் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம் – பிட்ச் ரிப்போர்ட்

IND vs AUS MCG
- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்தியா 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அந்தப் போட்டியில் 9.4 ஓவரில் 97/1 ரன்கள் எடுத்த இந்தியா நன்றாகத் துவங்கியும் வெற்றி காண முடியவில்லை.

எனவே 2வது போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தயாராகியுள்ளது. மறுபுறம் ஒருநாள் தொடரைப் போலவே இந்தியாவை தோற்கடித்து முன்னிலை பெற ஆஸ்திரேலியாவும் தயாராக இருக்கிறது. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2வது போட்டி அக்டோபர் 31ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்கு துவங்குகிறது.

- Advertisement -

மெல்போர்ன் மைதானம்:

1853ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இம்மைதானம் 100000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இங்கே 2008 முதல் நடைபெற்று வரும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மொத்தம் 19 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 15 போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலியா9 வெற்றி, 5 தோல்விகளை சந்தித்துள்ளது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

இம்மைதானத்தில் இந்தியா 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளைப் பெற்றுள்ளது. 1 போட்டியில் தோற்ற நிலையில் மற்றொரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. இங்கே இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மெல்போர்ன் மைதானத்தில் 4 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 2 வெற்றிகள், ஆஸ்திரேலியா 1 ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது. 1 மழையால் கைவிடப்பட்டது. எனவே இம்மைதானம் இந்தியாவுக்கு கொஞ்சம் ராசியானது என்றே சொல்லலாம்.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:

மெல்போர்ன் மைதானம் உலகிலேயே பெரிய மைதானங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. வரலாற்றில் இந்த மைதானம் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சாதகமாக இருந்து வருகிறது. மெல்போர்ன் பிட்ச்சில் ஆஸ்திரேலியாவில் வழக்கமாக இருக்கக்கூடிய வேகம், பவுன்ஸ் இருக்கும். அதைப் பயன்படுத்தி வேகப்பந்து வீச்சாளர்கள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

இதையும் படிங்க: காயமடைந்த ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் கிரிக்கெட் காலத்திற்க்கு திரும்புவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் – விவரம் இதோ

வேகம், பவுன்ஸ் ஆகியவற்றை சமாளிக்கத் தெரிந்த பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது. மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். வரலாற்றில் இங்கு நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 145. இந்த மைதானத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 7 முறையும் சேசிங் செய்த அணிகள் 11 முறையும் வென்றுள்ளன. எனவே இம்முறை டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீசி எதிரணியைக் கட்டுப்படுத்தி பின்னர் சேசிங் செய்வது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement