- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2வது ஒன்டே நடைபெறும் அடிலெய்ட் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் 7 விக்கெட் வித்யாசத்தில் தோற்ற இந்தியா ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்தது. அந்தப் போட்டியில் இந்தியா பேட்டிங்கில் இந்திய அணி சொதப்பியது தோல்விக்கு முக்கிய காரணமானது.

எனவே 2வது போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட அனைத்து பேட்ஸ்மேன்களும் சேர்ந்து பெரிய ரன்கள் குவிப்பது அவசியமாகிறது. அப்போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற கட்டாயத்தில் இந்தியா களமிறங்க உள்ளது. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2வது போட்டி அக்டோபர் 23ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 9:00 மணிக்கு அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் துவங்குகிறது.

- Advertisement -

அழகான அடிலெய்ட்:

உலகிலேயே மிகவும் அழகிய மைதானங்களில் ஒன்றான அடிலெய்ட் ஓவல் 1873இல் தோற்றுவிக்கப்பட்டு 50000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இங்கு 1975 முதல் நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 94 போட்டிகள் நடைபெற்றுள்ளது. அதில் ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் 6 போட்டிகளில் மோதியுள்ளன. அந்த 6 போட்டிகளில் ஆஸ்திரேலியா 4, இந்தியா 2 வெற்றிகளைப் பெற்றுள்ளது.

வெதர் ரிப்போர்ட்:

கடந்தப் போட்டியை போல் அல்லாமல் இப்போட்டி நடைபெறும் அடிலெய்ட் நகரில் அக்டோபர் 23ஆம் தேதி 10 % மட்டுமே மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. எனவே 2வது போட்டி பெருமளவு மழையின் பாதிப்பு இல்லாமல் நடைபெறும் என்று நம்பலாம்.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:

அடிலெய்ட் மைதானத்தில் வழக்கமான வேகம் மற்றும் பவுன்ஸ் இருக்கும். அதைப் பயன்படுத்தி சூழ்நிலையை அறிந்து விளையாடும் பேட்ஸ்மேன்களால் பெரிய ரன்கள் குவிக்க முடியும். வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய பந்தில் சவாலைக் கொடுப்பார்கள். போட்டி செல்ல செல்ல ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

இதையும் படிங்க: இன்னும் 68 ரன்கள் தான்.. ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் விராட் கோலி – விவரம் இதோ

இம்மைதானத்தில் வரலாற்றில் நடைபெற்ற 94 போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங் ஸ்கோர் 225. சராசரி 2வது இன்னிங்ஸ் ஸ்கோர் 195. 49 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்றுள்ளன. 43 போட்டிகளில் சேசிங் செய்த அணிகள் வென்றுள்ளன. எனவே இம்முறை டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

- Advertisement -