IND vs AUS : முதல் ஒன்டே நடைபெறும் மும்பை வான்கடே மைதானம் எப்படி? புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

Wankhede Stadium
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையை 2 – 1 (4) என்ற கணக்கில் வென்ற இந்தியா தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை நிரூபித்தது. இருப்பினும் 3வது போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்று கடைசி போட்டியில் டிரா செய்து இத்தொடரை திருப்திகரமாக நிறைவு செய்தது. மறுபுறம் இலங்கையை நியூசிலாந்து தோற்கடித்த உதவியுடன் ஜூன் மாதம் நடைபெறும் ஃபைனலில் மீண்டும் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இந்தியா தகுதி பெற்றது. இதையடுத்து வரும் அக்டோபர் மாதம் இந்திய மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இவ்விரு அணிகளும் 3 போட்டியில் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்குகிறது.

இத்தொடரில் டேவிட் வார்னர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் திரும்பியுள்ளதால் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்று டெஸ்ட் தொடரில் சந்தித்த தோல்விக்காக இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலியா தயாராகியுள்ளது. மறுபுறம் எப்போதுமே சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா ஹர்திக் பாண்டியா, விராட் கோலி உள்ளிட்ட முதன்மை வீரர்களுடன் களமிறங்குவதால் ஆஸ்திரேலியாவை இத்தொடரிலும் தோற்கடித்து சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் கோப்பையை வெல்ல போராட உள்ளது.

- Advertisement -

வான்கடே மைதானம்:
இதை தொடர்ந்து இத்தொடரின் முதல் போட்டி மார்ச் 17ஆம் தேதியன்று மும்பையில் இருக்கும் புகழ் பெற்ற வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 1.30 மணிக்கு துவங்குகிறது. கடந்த 1987 முதல் 2011 உலக கோப்பை ஃபைனல் உட்பட பல மறக்க முடியாத போட்டிகளில் நடத்திய பெருமையை கொண்ட இந்த மைதானத்தில் வரலாற்றில் இதுவரை 22 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் தலா 11 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளும் சேசிங் செய்த அணிகளும் வென்றுள்ளன.

1. இங்கு 19 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 10 வெற்றிகளையும் 9 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. குறிப்பாக இந்த மைதானத்தில் 4 போட்டிகளில் இந்தியாவை எதிர்கொண்ட ஆஸ்திரேலியா 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இந்தியா ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. கடைசியாக கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியா நிர்ணயித்த 255 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியா டேவிட் வார்னர் சதத்தின் உதவியுடன் எளிதாக 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

- Advertisement -

2. எனவே ஆஸ்திரேலியாவுக்கு ராசியாக இருக்கும் இந்த மைதானத்தில் இந்தியா இம்முறை கவனத்துடன் விளையாட வேண்டியுள்ளது. இங்கு ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (455) அடித்த வீரராக சச்சின் டெண்டுல்கர் உள்ளார். இந்த மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் சனாத் ஜெயசூர்யா : 151*, இந்தியாவுக்கு எதிராக, 1997.

3. இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த வீரர் வெங்கடேஷ் பிரசாத் : 15 விக்கெட்கள். சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த பவுலர் முரளி கார்த்திக் : 6/27, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக

- Advertisement -

4. இம்மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி தென்னாப்பிரிக்கா : 438/4, இந்தியாவுக்கு எதிராக, 2015. குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி வங்கதேசம் : 115 ஆல் அவுட் – இந்தியாவுக்கு எதிராக, 1998.

பிட்ச் ரிப்போர்ட்:
மும்பை வான்கடே மைதானத்தில் இருக்கும் பிட்ச் பிளாட்டாக இருப்பதால் டி20 கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிந்து வருகிறார்கள். கிட்டத்தட்ட அதே போலவே ஒருநாள் போட்டிகளிலும் இங்கு பிளாட்டான பிட்ச் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த மைதானத்தின் பவுண்டரி எல்லைகளும் சிறியதாகவே உள்ளது.

- Advertisement -

அதனால் கால சூழ்நிலையில் புரிந்து நன்கு செட்டிலாகும் பேட்ஸ்மேன்கள் எளிதாக பெரிய ரன்களை அடிக்கலாம். இருப்பினும் ஆரம்பகட்ட புதிய பந்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது. அதே போல் போட்டி நடைபெற நடைபெற திறமையை வெளிப்படுத்தும் ஸ்பின்னர்கள் குறிப்பாக மிடில் ஓவர்களில் போட்டியை மாற்றும் அளவுக்கு விக்கெட்டுகளை எடுப்பார்கள்.

இம்மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 247 ஆகும். இங்கு வரலாற்றில் முதலில் பேட்டிங் செய்த அணிகளும் சேசிங் செய்த அணிகளும் சமமான வெற்றிகளை பெற்றுள்ளது. அதன் காரணமாகவும் இது இரவு நேர போட்டியாக நடைபெறுவதாலும் டாஸ் வெல்லும் கேப்டன் சேசிங் செய்வது வெற்றிக்கு வித்திடலாம்.

இதையும் படிங்க:வீடியோ : விராட் கோலியின் மேஜிக் வார்த்தையால் ஆர்சிபி முதல் வெற்றி – பிளே ஆஃப் செல்ல நிகழ வேண்டிய கால்குலேட்டர் முடிவு இதோ

வெதர் ரிப்போர்ட்: மும்பை நகரில் போட்டி நாளன்று மழைக்கான வாய்ப்பில்லை என்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement