இந்தியா – ஆப்கானிஸ்தான் 3வது டி20 நடைபெறும் பெங்களூரு மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் ரிப்போர்ட்

M Chinnaswamy Stadium
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடி வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது. அதனால் ஏற்கனவே 2 – 0* என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியுள்ள இந்தியா தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை நிரூபித்து 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தில் தொடர்ந்து அசத்தி வருகிறது.

அந்த வகையில் 3வது போட்டியிலும் ஆப்கானிஸ்தானை தோற்கடித்து 3 – 0 என்ற கணக்கில் ஒய்ட்வாஷ் செய்து இத்தொடரின் கோப்பையை வெல்லும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது. மறுபுறம் தரவரிசையில் 10வது இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தான் முடிந்தளவுக்கு சிறப்பாக செயல்பட்ட போதிலும் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

- Advertisement -

பெங்களூரு மைதானம்:
எனவே கடைசி போட்டியில் முழுமூச்சுடன் விளையாடி ஒயிட்வாஷ் தோல்வியை தவிர்க்கும் முனைப்புடன் ஆப்கானிஸ்தான் களமிறங்க உள்ளது. அந்த வகையில் இத்தொடரின் கடைசி போட்டி ஜனவரி 17ஆம் தேதி இரவு 7 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. 1969இல் தோற்றுவிக்கப்பட்டு 40,000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளை கொண்ட இந்த மைதானத்தில் 2012 முதல் டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அதில் மொத்தம் நடைபெற்றுள்ள 9 போட்டிகளில் 7 முறை விளையாடியுள்ள இந்தியா 6 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. அந்த வகையில் இந்தியாவின் கோட்டையாக திகழும் இம்மைதானத்தில் அதிக ரன்கள் (139) மற்றும் அதிகபட்ச ஸ்கோர் (113*) அடித்த வீரராக ஆஸ்ட்ரேலியாவின் கிளன் மேக்ஸ்வெல் சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

இங்கு அதிக விக்கெட்டுகள் (6) மற்றும் சிறந்த பவுலிங்கை பதிவு செய்த வீரராக இந்தியாவின் யுஸ்வேந்திர சஹால் (6/25) முதலிடத்தில் உள்ளார். இந்த மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி : இந்தியா 202/6, இங்கிலாந்துக்கு எதிராக, 2017

வெதர் ரிப்போர்ட்:
ஜனவரி 17ஆம் தேதி பெங்களூரு நகரை சுற்றிய பகுதிகளில் மழை பெய்வதற்கு வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை மையம் தெரிவிப்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறலாம்.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:
சின்னசாமி மைதானம் ஐபிஎல் முதல் சர்வதேசம் வரை பேட்டிங்க்கு சாதகமாக இருந்து வருகிறது. குறிப்பாக இங்குள்ள பிட்ச் ஃபிளாட்டாகவும் பவுண்டரிகளின் அளவு சிறியதாகவும் இருக்கும். எனவே அதை பயன்படுத்தி நிலைத்து நிற்கும் பேட்ஸ்மேன்கள் எளிதாக பெரிய ரன்கள் குவிக்கலாம்.

இதையும் படிங்க: இந்திய அணியில் கம்பேக் கொடுத்து.. அந்த சாதனையை படைக்காமா விடமாட்டேன்.. ரகானே நம்பிக்கை

அதனால் பவுலர்கள் நல்ல லைன், லென்த் ஆகியவற்றை பின்பற்றினால் மட்டுமே சிறப்பாக செயல்பட முடியும். இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 141 ரன்களாகும். இங்கு வரலாற்றில் நடந்த 9 போட்டிகளில் 3 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும் 5 முறை சேசிங் செய்த அணியும் வென்றுள்ளது. எனவே இம்முறை பனியின் தாக்கமும் இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீசத் தீர்மானிப்பது வெற்றியை கொடுக்கலாம்.

Advertisement