50 ஓவர் போட்டியை 5 ஓவரில் முடித்து அசத்திய இந்திய அண்டர் 19 அணி – டிராவிட் பயிற்சி சும்மாவா ?

u-19
- Advertisement -

தென்னாப்பிரிக்க நாட்டில் தற்போது 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரில் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது.

u 19 ind

- Advertisement -

இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி முதல் முதலாக உலக கோப்பை தொடரில் விளையாடும் ஜப்பான் அணியுடன் மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் ஜப்பான் அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இருந்து வெளியேறி கொண்டே இருந்தனர்.

முடிவில் 50 ஓவர்கள் கொண்ட இந்த போட்டி 23 ஓவர்களிலேயே 41 ரன்களுக்கு ஜப்பான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன்பிறகு 42 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி ஐந்தாவது ஓவரிலேயே 4.5 ஓவரில் 42 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

u 19 ind 1

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். பேட்டிங்கை பொருத்தவரை ஜெய்ஸ்வால் மற்றும் குமார் ஆட்டமிழக்காமல் 29 மற்றும் 13 ரன்கள் எடுத்தது வெற்றிபெற வைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement