- Advertisement -
இந்திய கிரிக்கெட்

53 ஆண்டுகால வரலாற்றில் எந்தவொரு அணியும் நிகழ்த்தாத சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் இந்திய அணி – விவரம் இதோ

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது அண்மையில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த தொடரை இந்திய அணி மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது கொழும்பு நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் இன்று நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இலங்கை அணிக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்களை குவித்துள்ளது.

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி 53 வருட ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய சாதனையை படைக்க வாய்ப்புள்ளது குறித்த தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதன்படி இலங்கை அணிக்கு எதிராக இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் இலங்கை அணிக்கு எதிராக மட்டும் இந்திய அணி பெறும் நூறாவது ஒருநாள் போட்டி வெற்றியாக இது பதிவாகும்.

- Advertisement -

இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை பதிவு செய்த முதல் அணியாக இந்திய அணி தனி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்த வாய்ப்பு உள்ளது. இதுவரை இந்திய அணி இலங்கை அணியை 99 ஒருநாள் போட்டிகளில் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : முதல் இலங்கை ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்கள் கருப்பு பட்டை அணிந்தது ஏன்? பிசிசிஐ சோகமான அறிவிப்பு

இந்திய அணிக்கு அடுத்ததாக ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக மட்டும் 96 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதற்கடுத்து பாக்கிஸ்தான் அணி இலங்கை அணிக்கு எதிராக 93 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோன்று ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 88 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -