சிட்னி நகரில் ஜனவரி 3-ஆம் தேதி துவங்கிய இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணத்தில் கைப்பற்றி அசத்தியது.
பிங்க் நிற ஜெர்சி அணிந்து விளையாடிய இந்திய அணி :
இந்த போட்டியின் ஆரம்ப நாளிலிருந்து ஆஸ்திரேலிய அணி பிங்க் நிற ஜெர்சியை அணிந்து விளையாடி வந்தது. ஆனால் இன்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தின் போது இந்திய வீரர்களுக்கும் பிங்க் நிற தொப்பி வழங்கப்பட்டு, அவர்களுக்கும் பிங்க் நிற சீருடை வழங்கப்பட்டது.
இப்படி இந்திய அணியும், ஆஸ்திரேலியா அணியுடன் இணைந்து இளஞ்சிவப்பு நிறம் கொண்ட ஜெர்சி அணிந்து விளையாட என்ன காரணம்? என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த தகவல் அனைவரது மத்தியிலுல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இந்திய அணி இந்த இளஞ்சிவப்பு நிறத்திலான ஜெர்சி அணிந்து விளையாட காரணம் யாதெனில் :
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான கிளென் மெக்ராத் நடத்தி வரும் புற்று நோய்க்கு எதிரான அறக்கட்டளையே இந்த மாற்றத்திற்கு காரணமாகும். ஆண்டு தோறும் ஜனவரி மாதம் சிட்னியில் நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் இளஞ்சிவப்பு நிற ஜெர்சி அணிந்து விளையாடுவது வழக்கம். இதற்கு காரணம் யாதெனில் : கிளன் மெக்ராத்தின் மனைவி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் மார்பக புற்றுநோய் காரணமாக காலமானார்.
அதனை தொடர்ந்து இதேபோன்று யாரும் பாதிக்கக்கூடாது என்பதற்காக மார்பக புற்று நோய்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், புற்று நோய்க்கு எதிரான பாதுகாப்பு குறித்தும் ஒரு அறக்கட்டளையை உருவாக்கி அந்த அறக்கட்டளைக்காக இந்த பிங்க் டெஸ்ட் போட்டியை நடத்தி நிதிதிரட்டி வருகிறார். அப்படி கிடைக்கும் பணம் முழுவதையும் அவர் அந்த அறக்கட்டளைக்காக செலுத்தி அதன் மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியும் வந்தார்.
இதையும் படிங்க : உண்மையிலேயே எனக்கு இது ஏமாற்றமாக இருந்தது.. ஆனா என்ன பண்றது – வருத்தத்தை தெரிவித்த ஜஸ்ப்ரீத் பும்ரா
இந்நிலையில் இந்த மூன்றாவது நாள் ஆட்டத்தின் போது இந்திய வீரர்களுக்கும் பிங்க் நிற தொப்பி மற்றும் ஜெர்சியை வழங்கி புற்றுநோக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மெக்ராத் இந்த செயல்பாட்டினை முன்னெடுத்துள்ளார். இந்த விடயம் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



